Tuesday, January 25, 2011

ஹொக்ரெயில் - 25.01.2011

மீண்டும் ஒரு பயங்கரவாதம்!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள ரொமொட்ரரோவோ விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலானது மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தின்மேல் உலகை அச்சம் கொள்ளச்செய்துள்ளது.
மிகைப்பட்ட பாதுகாப்புக்கள் இருந்தும் வருகை பயணிகள் வந்து தமது பொதிகளை பெல்ட்களில் இருந்து எடுக்கும் இடத்தில் இந்த தற்கொலை தாக்குதல் இடம்பெற்றது என்பது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

அசண்டையினமாக விடப்படும் ஒவ்வொரு கவலையீனப்பிழைகளும் பயங்கரவாதத்தின் கோரத்தனமான பயங்கரத்திற்கு போதுமான புகழிடாக அமைந்துவிடுவதை இந்த குண்டுத்தாக்குதல் மீண்டும் ஒருதடவை நிரூபித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் என இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை எச்சரிக்கப்பட்ட நிலையில் திடீர் என ரஷ்யாவில் நிகழ்ந்த தாக்குதல் மேற்குலக நாடுகளை அலேட் ஆக்கியுள்ளன.
எது எப்படியோ..பயங்கரவாதத்திற்கு அயிரம் காரணங்கள் கூறப்படலாம். ஆனால் பயங்கரவாதிகள் மட்டும் இன்றி எவர், எந்த வகையிலும், யாராலும் அப்பாவிப் பொதுமக்கள் கோரமான கொலை செய்யப்படுவதை எவரும் அனுமதிக்கமாட்டார்கள்.

ஃபட்டில்: லொஸ் ஏஞ்சல்ஸ்.
2012 திரைப்படத்தின் பின்னர் மீண்டும் ஒரு திகில் அனுபவத்திற்கு எம்மை தயார்ப்படுத்துகின்றது ஃபட்டில்: லொஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படத்தின் செய்திகள்.
மார்ச் மாதம் 11ஆம் திகதி இந்த திகில் அனுபவத்தை காண நீங்கள் இப்போதே தயாராகலாம். அந்த அளவுக்கு மிக விறுவிறுப்பாகவும், கற்பனைக்கும் எட்டாத வகையிலும் ரெய்லர்கள் நம்மை பிரமிக்கவைக்கின்றன.

கொலம்பியா பிக்ஸர்ஸ் (சொனி) தயாரிப்பில், ஜொனத்தன் லீபெஜ்மனின் இயக்கத்தில் ஃபட்டில்: லொஸ் ஏஞ்சல்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
யூ.எவ்.ஓ என்னும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக ஆச்சரியத்துடன் தலையை இன்னும் சொறிந்துகொண்டிருக்கும் உலகத்திற்கு, பறக்கும் தட்டுக்கள், வேற்றுகிரக மனிதர்கள் என்பவற்றின்மீது ஒரு பீதி அடிமனதில் இருந்துகொண்டே இருக்கின்றது.
இந்தப்பெரிய பிரபஞ்சத்தில் ஒரு தூசிக்கும் பெறாத பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் உள்ளது என்ற அறிவு, வேடிக்கையானது என்பதைவிட, மிகச்சுயநலமானது என்பதை இன்று மனதில் பலர் ஏற்றுக்கொண்டுவருகின்றனர்.

இதைவைத்தே விஞ்ஞான புனைகதைகள் வெளியாகின. கால காலங்களில் அவை திரைப்படங்களாகவும் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் நம்மைமீறிய சக்திகள் சம்பந்தமான கற்பனைகளுக்கு வாயைப்பிழக்கும் மக்கள்கூட்டம் அதிகரித்துள்ள நேரத்தில் இதை திகிலுடன் தந்து வெற்றி அடைந்துவிடும் யுத்தியை இப்போது இயக்குனர்கள் கையாண்டுவருகின்றனர்.
11.03.2011இல் மீண்டும் ஒரு திகில், திரில்லர் காட்சிகளுக்கு தயாராகுங்கள்.

ஹெலி கொப்டர் ஷொட்.
இந்தியாவில் சச்சினுக்கு பின்னர் விளம்பரங்களில் பிரபலமான கிரிக்கட்டர் டோனிதான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. சச்சினுக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து கொண்டாடும் குட்டீஸ்கள், தமது நாயக லிஸ்டில் இப்போ டோனியையும் சேர்த்துள்ளனர் என்பதை கண்டுகொள்ளலாம்.
அந்த வகையில் இப்போ பலதரப்பட்டவர்களையும் கவர்ந்திருக்கும் விளம்பரம், இந்த ஹெலி கொப்டர் ஷொட் விளம்பரம்.
ஆனா..ஒன்னுங்க.. இந்த விளம்பரம் டோனியை பாராட்டுதா? இல்லை ஓட்டுதா?

சாப்பாட்டுக்கடை

இந்த சமாசாரத்தை பற்றி பல பதிவர்கள் தொடராக எழுதிவாறாங்க.. நம்மளால இதை எல்லாம் எழுதமுடியாது. ஏன் என்றால் வீட்டுச்சாப்பாடே போதும் போதும் என்ற வகையில் கிடைக்கிறதுபோக வெளிச்சாப்பாடு, உடலுக்கும், மனதிற்கும் ஒத்துக்கொள்வதில்லை.
ஆனால் இந்த சாப்பாட்டுக்கடை சமாசாரத்தை எழுதி உங்களை ஏதாவது ஹொட்டலுக்கு கூட்டிப்போகணும் என்று பெரிய அவா…
ஸோ.. சும்மா இல்லை. உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஹொட்டலுக்கு அழைத்துப்போறேன்..

டுபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டத்தில் 122ஆவது மாடியில் அண்மையில் ஒரு ரெஸ்ரூரன்ட் திறந்திருக்கின்றார்கள். 442 மீற்றர் உயரத்தில் (அண்ணலாவாக அரை கிலோ மிற்றர் உயரம்) இந்த ரெஸ்ரூரன்ட் இருக்கு.
சைனிஸ், இன்டோ பூட்ஸ், இத்தலியன் பூட்ஸ், தாய் பூட்ஸ், என எந்த வகை உணவையும் சாப்பிட்டுக்கொள்ளலாம். (வடை, சுடுசோறு எல்லாம் அங்கையும் போய் கேட்கப்படாது ஆமா)
இங்கு ஒரே நேரத்தில் 210 பேர் அழகாக இருந்து உணவு சாப்பிடலாம்.
சும்மா உள்ளபோய்.. கோக், பெப்ஸி அருந்தி ஏதாவது சின்ன ஸிப்சை சாப்பிட
கிட்டத்தட்ட 93 டொலர்ஸ் கேப்பானுகளாம்! (என்ன போயிர்லாமா?)

இந்தவாரக் குறும்படம்.

இந்தவார வாசிப்பு
ஒரே ஒரு துரோகம்.

1980களின் ஆரம்பத்தில் சுஜாதா சாவிக்கு எழுதிய தொடர்கதை இது.
இதில் சம்பத், ராஜி என்ற இரண்டு பாத்திரங்களினூடாக அவர்களின் கோணங்களில் ஆரம்பம்முதல் முடிவுவரை கதையை மிகச்சுவாரகசியமாக நகர்த்திச்செல்கின்றார் சுஜாதா.
ஒரு சமூகநாவல் ஒன்றின் அம்பசங்கள் கதையின் இடைக்கிடை எட்டிப்பார்ப்பதையும் கவனிக்கமுடிகின்றது. விடும் மூச்சுக்காற்றைக்கூட பொய்யாகவே விட்டு வாழும் சம்பத், ஒரு பேராசிரியையான தன் மனைவி ராஜியையே எப்படி எல்லாம் பொய்சொல்லி ஏமாற்றுகின்றான். ஆனால் ராஜியின் பார்வையில் என்றும் பவித்திரமானவனாகவே அவன் இருப்பதும் அதிசயிக்கவைக்கின்றது.
அனால் கதையின் இறுதி முடிவில் நான் சுஜாதாவுடன் முரண்பட்டு நிற்கின்றேன். இந்த கதைக்கு முடிவு, இது அல்ல என்பதே வாசித்து முடிக்கும்போது மனதில் எற்பட்ட பீலிங்..

21ம் விளிம்பு.

20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பத்தில் நின்றுகொண்டு 21ஆம் நூற்றாண்டு எப்படி என்று தூரப்பார்க்கும் ஒரு படைப்பு என்றுதான் இதை சொல்லவேண்டும்.
குமுதம் இதழில் சுஜாதா ஆசிரியராக இருந்த காலங்களில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு.
அடுத்த நூற்றாண்டு என்றவுடன், ரெக்னோலொஜி, விஞ்ஞானம், சாட்டிலைட்கள் என்று மனதில் ஓடும், அனால் இதில் இவை மட்டும் இன்றி, இலக்கியம், பயணங்கள், நோய்கள், ஆராட்சிகள், ஆட்சிகள் என்று பல்வேறு விடயங்களையும் தொடடுக்கொண்டு செல்கின்றார் சுஜாதா.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் 1993-94 காலங்களில் 21ஆம் நூற்றாண்டில் இப்படித்தான் இருக்கும் என்று அப்போதே சுஜாதா தொட்டுக்காட்டிய பொருட்கள் இன்று எம் கைகளில் இருப்பது பெரும் ஆச்சரியமே. அதுபோல இலக்கிய வடிவங்களும் எம்மையறியாது சிறியமாற்றம் ஒன்றை எடுத்துள்ளதை கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அதேவேளை இந்தக்காலங்களுக்குள் இவை வந்துவிடலாம் என சுஜாதா ஆரூடம்கூறிய சில இன்னும் தொழிநுட்பரீதியாக இன்னும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. படித்துமுடித்தவுடன், ஒன்று மட்டும் நன்றாக தோன்றுகின்றது.
இது தமிழில் சுஜாதாவால் மட்டுமே முடியும்.

மியூசிக் கபே

ஜோக் பொக்ஸ்
பூனை ஒன்றை எலி ஒன்று படாதபாடு படுத்திட்டே இருக்கும் (நம்ம ரொம் அன்ட் ஜெர்ரி போல) பூனையும் எலியை எப்படியாவது புடிச்சுப்புடனும் என்று எவ்வளவோ ட்ரை பண்ணி களைச்சுப்போயிட்;டுது. காரணம் எப்படியோ எலி ஓடிப்போய் தன் வளைக்குள்ள பதுங்கிடும். பூனையும் காத்திருந்து கழைத்துப்போய் அப்புறம் போய்டும்.
ஆனால் அடுத்த நாளும் எலியின் சேட்டை தொடங்கிடும்.
ஒருநாள் இன்று விடுறதில்லை என்று பூனையும், எலியை துரத்து துரத்து என்று துரத்தி, எலிவளைக்கு பக்கத்திலேயே காத்திருந்திச்சு.. எலியும் எட்டி எட்டி பார்த்துப்புட்டு பூனை நிற்கிறது என்று உள்ள பேசாமலே நின்னுடிச்சு..
திடீர் என்று நாய் குலைத்து சத்தம் கேட்டது.
“ஆஹா..நாய் வந்தால் நம்ம பூனையார் ஓடிடுவாருல்லை!! என்று நினைத்துக்கொண்டே எலி வெளிய வந்திச்சு. ஒரே ஆமுக்க எலியை ஆமுக்கிவிட்டு
எலிக்கிட்ட பூனை சொல்லிச்சாம்.
“இதுதான்டா சொல்லுறது ரெட்டு பாசை தெரிந்திருக்கணும் என்று”

14 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

first vote from me.vadai for me?

Unknown said...

hmmm nalla pakirvu

Unknown said...

தொகுப்புகள் அத்தனையும் அருமை!!
ரஷ்யா..பார்த்தேன் அந்த சம்பவத்தை..கொடுமை சார்!

Admin said...

//இங்கு ஒரே நேரத்தில் 210 பேர் அழகாக இருந்து உணவு சாப்பிடலாம்.
சும்மா உள்ளபோய்.. கோக், பெப்ஸி அருந்தி ஏதாவது சின்ன ஸிப்சை சாப்பிட
கிட்டத்தட்ட 93 டொலர்ஸ் கேப்பானுகளாம்! (என்ன போயிர்லாமா?) //

வேணும்னா வாங்க கூட்டிட்டு போறன். ஆனா, உள்ள வர மாட்டேன்.. டீலா அண்ணா?

கொக்ரயில் சூப்பர். வாழ்த்துக்கள்

டிலான் said...

கெலிகப்ரர் சொட்டையும், எலி, பூனை யோக்கையும் கூடுதலாக இரசித்தேன்.
2012 உங்களுடன் ஒன்றாய் பார்த்த நினைவுகள். Battle Loss angles பார்ப்பம் இங்க வாறியளோ?

நிஷா said...

Very nice Cocktail.
I like Short film and kamal Kashan's Sivappu Rojakkal song..

தமிழ் உதயம் said...

கதம்ப மாலை அருமை.

KANA VARO said...

இந்தியக் கிரிக்கட் வீரர்களின் விளம்பரங்களைப் பார்க்கும் போது, 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றுடன் இந்திய அணி வெளியேற்றப்பட்டதும் அவர்களை வைத்து இந்திய சானல்கள் பின்னி எடுத்து விட்டன. அதுவும் சன் ரி.வி யில் ஒளிபரப்பான 'சூப்பர் 10' நிகழ்ச்சியை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

சுஜாதாவுடைய புத்தகங்கள் மட்டுமா வாசிப்பீங்க? அல்லது அது மட்டுமா கிடைக்குது? (சின்ன டவுட் பாஸ்)

Chitra said...

பல தகவல்கள் கொண்ட தொகுப்பு. Good mixture. :-)

தர்ஷன் said...

வழமைப் போலவே அருமை

//எது எப்படியோ..பயங்கரவாதத்திற்கு அயிரம் காரணங்கள் கூறப்படலாம். ஆனால் பயங்கரவாதிகள் மட்டும் இன்றி எவர், எந்த வகையிலும், யாராலும் அப்பாவிப் பொதுமக்கள் கோரமான கொலை செய்யப்படுவதை எவரும் அனுமதிக்கமாட்டார்கள்.//

வழிமொழிகிறேன்

இம்மாதிரியான ஆங்கிலப்படங்கள் என்னைப் பெரியளவில் கவர்வதில்லை ஜனா அண்ணா

ஒரே ஒரு துரோகத்தைப் பற்றி பேசாதீங்க எனக்கு பிடிக்காத வாத்தியாரின் கதை முன்னொரு பதிவிலும் எழுதியிருந்தேன் ஏதோ ரமணிச்சந்திரன் கதை போல இருக்கும்.

pichaikaaran said...

வழக்கம்போல அருமை

கார்த்தி said...

உண்மையில் வியக்கிறேன்! என்னண்டுதான் கிழமைக்கு குறையாம 5பதிவுபோட உங்களால் மட்டும் முடிகிறது. நீங்கள் பதிவர்சந்திப்பில் அதை கூறியிருந்தாலும் என்னால் ஏற்கமுடிவதில்லை.
அந்த addஐ பார்த்து ரசித்தேன். இந்தமுறையும் எல்லாதரப்பட்ட இடங்களிலும் உங்கள் பார்வை சென்றுள்ளது!

ஷஹன்ஷா said...

வழக்கம் போல் அருமை....

ரஸ்யா...-அறிந்ததும் அதிர்ச்சி.....என்ன செய்ய உலகை இப்போது ஆள்பவர்கள் அவர்கள்தானே..-பயங்கரவாதிகள்

ஃபட்டில்: லொஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படம்- தயார் அனுபவிக்க.... டிரைலர் சூப்பரா செய்துள்ளனர்..இசை!!!

விளம்பரம்..- ரசனை.

சாப்பாட்டு கடை...- ஃஃஃதாய் பூட்ஸ்ஃஃ அப்படி என்றால் அம்மா தயாரித்த உணவா...;)

நுால்- படிக்கணும்

பாடல்..சூப்பர் தெரிவு

ஜோக்...-புத்திசாலித்தனம்

Unknown said...

அருமையான பதிவு..

LinkWithin

Related Posts with Thumbnails