ஒளிபடைத்த முகம்..
ஏற்றமான மூக்கு..
செதுக்கிவைத்த பல்வரிசை
ஈர்த்துவிடும் கண்கள்…
எடுப்பான ஒரு தோற்றம்.
கூதிர்காலம் ஒன்றின் வெறுப்புற்ற தேடல்..
படத்துடன் கைகளில் சிக்கின
பொக்கிசமாக யோரோ வைத்த
பொத்திவைத்த நினைவு சின்னம்.
அழகான ஒரு எழுத்து..
ம்ம்ம்…தெரியும் இது என் அப்பாவுடையது..
படத்தில் இருக்கும் விம்பத்தை
கவிதைகள் இன்னும் தூக்கிவிட்டது..
சுயமான கவிதையிது என்றாலும்..
கண்ணதாசன் ஆங்காங்கே சிரித்தவண்ணம்..
அப்போதுகளில்…
அந்தப்படத்தைவிட அப்பாவின்
கவிதைகளே நெஞ்சத்தை தொட்டன
நெஞ்சம் பொருமலுடனான மெல்லிய
சிலிர்ப்பு சிரிப்பு ஒன்றும் என்னிலிருந்து..
70களின் பின்கூற்றுக்காதல் பிம்பங்கள்
கறுப்பு வெள்ளையாக மனதில் திரைபோட
காதல் சிறகை காற்றில் விரித்த எண்ணங்கள்
வான வீதியில் பறப்பதை கண்டு ஸ்ரிங்காரித்தேன்.
அன்புள்ள அப்பா…
உங்கள் காதல் கதையினை
நான் இன்றுவரை கேட்டதில்லை
கேட்டால் தப்பா? என்றெண்ணியதும் இல்லை.
அந்தக்கவிதை போதும்
நிரம்பலுடன் உங்கள் காதல்கதை சொல்ல
ஆனால் அந்தப்படம்???
அந்த ஒளிபடைத்த முகம்..
அந்த ஏற்றமான மூக்கு..
அந்த செதுக்கிவைத்த பல்வரிசை
அந்த ஈர்த்துவிடும் கண்கள்…
அந்த எடுப்பான ஒரு தோற்றம்
அவைதான் என் கருமூலமென்று
அன்றிலிருந்து இன்றுவரை
என் அகராதி சொல்லும் “அம்மா”
அம்மா, அன்னை, மாதா, பெற்றவள்,
தாய்மடி, அரவணைப்பு, தாய்மை
இத்தனையும் கிடைத்தது
அந்த புகைப்படத்தில்த்தானே!
பிஞ்சு வயதில் தவித்ததில்லை
அஞ்சு வயதில் அறிந்ததில்லை
இன்றும்கூட நினைப்பதில்லை
ஆனால் பதின்ம வயதில்
பரிதவித்த நினைவுகள்…
சூரியன் இன்றி…
சுற்றக்கற்றுக்கொண்ட பூமி
தான் ஒரு சூரியன் ஆனவுடன்
பிரகாசிக்கின்றது இப்போ…
ஒளிபடைத்த முகம்..
ஏற்றமான மூக்கு..
செதுக்கிவைத்த பல்வரிசை
ஈர்த்துவிடும் கண்கள்…
எடுப்பான ஒரு தோற்றம்
இதோ இப்போது என் கைகளில்
அதே ஈர்ப்பு கண்களுடன்
என்னைப்பார்த்து சிரிக்கின்றது.
அழைக்கின்றது “அப்பா” என்று.
8 comments:
////பிஞ்சு வயதில் தவித்ததில்லை
அஞ்சு வயதில் அறிந்ததில்லை///
சுகமான நினைவுகள் போல...
உருக்கமான கவிதை ஜனா அண்ணா
கூதிர்காலம் பழந் தமிழர் காலங்களை எல்லாம் ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி அப்புறம் அது என்ன பின்கூற்றுகாதல் you mean flashback
அற்புதமான கடைசி வரிகள்.
உருக்கமாக இருந்தது
ம்...
கவிதையை முழுமையாக புரிந்துகொள்ள முடியுது அண்ணர். உங்கள் மகள் அதிஸ்டக்காரி.
உருக வைத்த கவிதை...அருமை..
Post a Comment