பதிவெழுத வந்து நாம் பெற்றுக்கொண்டவை என்ன என்று கேள்வி ஒன்று வரும்போது கிடைக்கும் முதல் பதில், நல்ல பல நெஞ்சங்கள், அருமையான நண்பர்கள், நிறைய சகோதரர்கள்.
அந்த விதத்தில் எனக்கு இந்த பதிவுகள் மூலம் அன்பு தம்பிகள் பலர் கிடைத்துள்ளனர். (என்னடா கலைஞர் வாடை அடிக்குதே என்று ஒன்றும் யோசிக்ககூடாது ஆமா..)
அப்படி பதிவுலகில் எனக்கு கிடைத்த அண்ணர்களைவிட தம்பிக்களே என்னை அதிசயிக்கவைத்தவர்கள். அவர்களின் ஆற்றல்கள், அறிவின் ஆழங்கள் கண்டு பல முறை ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.
நாமதான் இந்த வயதில் எல்லாததுக்கும் பயந்துகொண்டு நல்லபிள்ளையா இருந்திட்டமோ என்றுகூட சிலநேரங்களில் சிந்திக்க வைத்தும் விடுவார்கள் பதிவுலகால் எனக்கு கிடைத்த தம்பிகள்.
அதேநேரம் அவர்களின் தேடல்கள், உலகநடப்புக்களில் கவனங்கள் என்பன என்னை பெரிதும் ஆச்சரியப்படவைத்துவிடும்.
அப்படியான எனக்கு கிடைத்த தம்பிக்களில் இன்று இரண்டு தம்பிகள் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்கள். இருவருமே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முத்துக்கள்.
ஒருவர் முகாமைத்துவம், மற்றவர் மருத்துவம். ஆனால் இரண்டுபேரும் இந்த இரண்டுதுறைகளுடனும் மட்டுப்பட்டவர்கள் மட்டும் அல்ல. இருவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு.(அதை பதிவில் சொல்லமுடியாதுங்கோ)
டிலான்.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அப்போது நான் சென்னையில் இருக்கும்போது யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை வந்திருந்தார் டிலான். ஈ.சி.ஆர். பாலவாக்கம் கடற்கரையில் அவரை முதல்முதலாக சந்திக்கின்றேன். ஏதோ கனகாலம் பழகியதுபோல அண்ணே..என்று கரங்களாலும், வார்த்தைகளாலும் இறுக்க கட்டிக்கொண்டார்.
இருவரின் வீடுகளும் சிறிய தூரத்தில்த்தான் இருந்ததனால், ஆரம்பத்தில் ஜிம்மில் சந்தித்துக்கொண்டோம், பின்னர் இலக்கிய கூட்டங்கள், குறும்பட திரையிடல் நிகழ்வுகள், குறும்பட தயாரிப்பு என்றும், சினிமாக்கள் பார்க்க, அப்படி இப்படி என்று நமது நட்பு இறுகி, ஒரு உதைபந்தாட்ட குழுவிலும் இருவரும் இணைந்துகொண்டு பல மச்கள் விளையாடினோம். எக்ஸ்ரீம் பொஸிஸனில் டிலான் புலி என்று அப்போது நான் கவனித்தேன்.
பின்னர் டிலானை சந்திக்கா நாட்கள் இல்லை என்ற அளவுக்கு பழகிக்கொண்டோம்.
அதன் பின்னர் பதிவு வட்ட நண்பர்கள், அருண், அடலேறு, நிலாரசிகன், கேபிள் சங்கர், ஒவனோ ஒருவன், சமுத்திரன் மற்றும் ஒரு இலங்கை பதிவர் சயந்தன் (நதிவழி) என அந்த நட்பு வட்டம் பெரிய வட்டமாக பரினாமித்தது.
அற்புதமான நாட்கள் அவை.. அதில் அற்புதமான நினைவுகள் டிலானுடன் என் தின அனுபவங்கள்.
டிலானுக்கு எப்படித்தான் ஒவ்வொரு சொல்லிலும் உண்மையிலேயே சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சரிக்க வைக்கும் மந்திரமும், அதேபோல அவற்றை எழுத்திலும் கொண்டுவரும் லாவகமும் அமைந்ததோ தெரியாது.
அந்த இடத்தையே கலகலப்பாக கட்டிப்போட்டு வைத்துவிடுவது டிலானின் தனித்துவம்.
இப்போது தொழில்த்துறையில் உறக்கநேரமே டிலானுக்கு 3 மணித்தியாலங்கள்தான் என அறிந்தேன். முன்னேற துடிக்கும் ஒருவனுக்கு இது பெரிய விடயம் அல்ல.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புத்தம்பி டிலான்.
பாலவாசகன்
சென்றவருடம் சித்திரை மாதமளவில் நான் சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பியவுடன், இலங்கை பதிவர்களின் வலைத்திரட்டியான யாழ்தேவி நடத்திய யாத்ரா இணையத்தமிழ் மாநாடு ஒழுங்குகள் இடம்பெற்றன.
இலங்கை வந்தவுடன் பல பதிவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது இந்த யாத்ராதான். யாத்ரா மாநாட்டிற்கான ஒழுங்குகளை கவனித்துக்கொண்டிருந்தவேளையில் மருதமூரானிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு..
ஜனா.. நான் ராஜா கிறீம் ஹவுஸிலை நிற்கின்றேன். பதிவர் பாலவாசகன் வருவார் நீங்களும் வருகின்றீர்களா என்று. சரி.. என்றுவிட்டு, என் எவ்.எஸ்.இஸட்டை முறுக்கிக்கொண்டு அங்கு சென்றேன். மிக பவ்வியமாக அங்கே மருதமூரானுடன் ஒருவர் இருந்து சிரித்தார். களையான முகம், வஞ்சனை அறவே இல்லாத சிரிப்பு,
பரஸ்பரம்..மருதமூரானால் அறிமுகம் செய்யப்படுகின்றோம்.
அண்ணா.. நீங்கதான் ஸியேஸ் வித் ஜனாவா? பார்த்திருக்கின்றேன். நான் நீங்கள் இந்தியப்பதிவர் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கின்றேன் என்றார்.
அன்றில் இருந்து ஆரம்பமாகியது அந்த நட்பு.
நாளை ஒரு முழு வைத்தியனாக பரினாமிக்கவுள்ள அவர் தன்னை மருத்துவத்துறையுடன் மட்டுப்படுத்திவிடாமல், பல துறைகளிலும் ஆர்வமும் தேடல்களுடனும் இருப்பது பல தடவை என்னை அதிசயிக்கவைத்துள்ளது.
என் வலைப்பதிவில்; நான் என்னைப்பற்றி சொல்லிக்கொண்ட சுயவிளக்கம் அப்படியே தம்பி பாலவாசகனுக்கும் பொருந்திய சந்தர்ப்பங்கள் பலவற்றை கண்டுகொண்டேன்.
எனக்கு தெரியாத விடயத்தை எனக்கு புரியவைக்கும்போது ஒரு ஆசானாகவும், அதேவேளை என்னிடமிருந்து தான் அறியாத விடயங்களை பெறும்போது, மாணவனாக அல்லாமல் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவது பாலவாசகனின் இயல்பு. வைத்தியன் என்ற ஒரு நிலையுடன் நின்றுவிடாமல், என்ன சொல்வாங்க ஆ.. அந்த எம்.டி, எவ்.ஆர்.ஸி.எஸ்.. இன்னபெற மேற்படிப்புக்களையும் தொடர்ந்துகற்று வைத்தியத்திலகமாக தம்பி வரவேண்டும் என்பதே இந்த அன்பான அண்ணனின் அவா..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி வாசகன்.
16 comments:
வாழ்த்துக்கள் பிறந்தநன்நாள் இருவருக்கும்.
அண்ணன்கள் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)
அன்பில் என்னை அபிஷேகமே செய்து விட்டீர்கள் !!
நன்றி ஜனா அண்ணா !
டிலான் மற்றும் பாலவாசகன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
நல்ல பேரை வாங்க வேண்டும் தம்பிகளே...
உங்களுக்கு ஒரு கூட்டுக்கிளியாக... பாடல் சமர்ப்பணம்..
இரு அண்ணன்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..:)
அண்ணா...............! வாழ்த்துகள் அண்ணாமார்....வாழ்வில் வளம் பெற மனமார வாழ்த்துகிறேன்.....!
இருவருக்கும் வாழ்த்துக்கள்!
டிலான்,பாலவாசகன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
That is sweet!
Convey our birthday wishes to them. :-)
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
முதலில் இருவருக்கும் எனது இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. டிலானும் எனது பதிவுலகத்தில் முக்கியமானவர் ஆரம்ப நாட்களில் என் எழுத்தை கண்டுபிடித்த பலருக்கு சொல்லியவர்.. நேரமின்மையிலும் கூட எனக்கு தொடர்ந்து கருத்திட்டவர்களில் ஒருவர்...
வைத்தியர் ஐயா மிகவும் நாணயமான 15 வருட கால நட்பு...
இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்கள் தம்பிகள் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜனா!
" (என்னடா கலைஞர் வாடை அடிக்குதே என்று ஒன்றும் யோசிக்ககூடாது ஆமா..) "
யோசிக்க வைச்சிட்டீங்க பாஸ்! அவர் மாதிரியே இருக்கு! ஹா.... ஹா.....!!
நன்றிகள் அண்ணர். பாலவாசகனுக்கு எனது வாழ்த்துக்கள். வாழ்தியோர் அனைவருக்கும் எனது அன்பு நன்றிகள்.
டிலான் மற்றும் பாலவாசகன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
Post a Comment