“இந்த இனிய புத்தாண்டு உலகிலே சாந்தி, சமாதானம், சுபீட்டசங்கள் செழித்து ஓங்கி, அனைத்து உயிர்களும் மகிழ்வுடன் வாழ பிரார்த்தனைகளோடு, வாழ்த்துக்கள்”
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், யதார்த்தங்களுடன் முரண்பட்டுக்கொண்டு, மனதில் இருக்கும் குழந்தைத்தனமான வாஞ்சையுடன் நாம் இது சாரப்பட ‘ஒரு சம்பிரதாயத்திற்கு’ இந்த நாளில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை கூறிவருகின்றறோம்.
மனதிற்கு வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும்கூட ஒரு ஆறுதலாகவே அமைந்தும் விடுகின்றது. 365 நாட்கள் கொண்ட ஒரு காலத்தொகுதியின் முடிவில், அடுத்த தொகுதிக்கு செல்கையில் எங்களை புதுப்பித்துக்கொள்ள இந்த வாழ்த்துக்கள் ஏதுவானதாக அமைந்துள்ளது.
பருவங்கள் பல கொண்ட ஆண்டில், வசந்தங்கள் மட்டும் அதிமாக இருக்கவேண்டும், என்று எண்ணுவதும்கூட ஒரு அடிமனதின் ஏக்கமே.
இயற்கை என்னும் மெய்மையை மனிதம் பொய்ப்பிக்க எண்ணியதால் இன்று இயற்கையும் பொய்துவிடுவது பெரும்வேதனையாகவே உள்ளது.
மகிழ்வான வாழ்வுக்கான ஆசிகளாக கூறப்படும் இந்த வாழ்த்துக்களில், இந்த பூமி என்னும் கிரகத்தில் மனித இனம் மட்டும் இன்றி அனைத்து இனமும், என்றும் நிலையாக வாழும்வண்ணம், ஒரு பெரிய முதலீடாக
“இயற்கையினை காப்போம்” என இந்த நாளில் சபதம் எடுத்துக்கொள்வோம்.
8 comments:
நல்ல சிந்தனை
எல்லாம் அவனவன் நலத்திற்காக சபதம் எடுக்கையில் இயற்கையை கொஞ்சம் நினைவூட்டியிருக்கிறீர்கள்
நன்று
இயற்கையைக் காப்போம்:)
இனிய புத்தாண்டும் வாழ்த்துக்கள் அண்ணா..:)
இனிய புத்தாண்டும் வாழ்த்துக்கள்
தங்கள் சிந்தனை போல என்றும் வாழ முயற்சிப்போம்.. வாழ்த்துக்கள்.. அண்ணா...
நல்லவொரு பாடல். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
\\\இயற்கையினை காப்போம்” என இந்த நாளில் சபதம் எடுத்துக்கொள்வோம்\\\\
மாற்றம் காண்போம். இயற்கையை காதலிப்போம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//இயற்கையினை காப்போம்//
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Post a Comment