மழை அனர்த்தம்.
இலங்கையில் இயற்கையில் பாரிய இயற்கை அனர்த்தம் எது ஏற்பட்டாலும் சரி அதில் நிற்சயம் பாதிக்கப்படும் இடமாக மட்டக்களப்பு உள்ளது. அதேசமயம் வெள்ளப்பெருக்கு, சூறாவளித்தாக்கல்கள் என்பவற்றுக்கு மட்டக்களப்பு உட்படுவது பல தடவைகள்.
நான் நினைக்கின்றேன் 1978ஆம் ஆண்டு இடம்பெற்ற சூறாவித்தாக்கத்தால் பாரிய பாதிப்புக்கு மட்டக்களப்பு பிரதேசம் உட்பட்டது. அதை தொடர்ந்து இலங்கை உட்பட பல நாடுகளை தாக்கி பேரவலத்தை ஏற்படுத்திய ஆழிப்பேரலைத்தாக்கத்தின்போதும் முதல் தாக்கலுக்கு மட்டக்களப்பு பிரதேசமே உட்பட்டது. இந்த நிலையில் கடும்மழையினால் பாரிய வெள்ள அனர்த்தத்தை சந்தித்து இந்த 2011 என்ற புதிய வருடமே அங்கு அனர்த்ததுடனேயே தொடங்கியுள்ளது மிக வேதனையான தருணமாகும்.
தொடர்ந்து பெய்துவரும் வரும் அடைமழையினாலும், வெள்ள அனர்த்தத்தினாலும் இன்று அங்கே நம் சகோதரர்கள் பாரிய அவலங்களை சந்தித்துக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக இந்த அனர்த்தத்தால் மூன்று உயிர்கள் இதுவரை காவு கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிவதுடன், கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மக்கள், பாதுகாப்பு நிமித்தம் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
இவர்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சில அரசசார்ப நிறுவனங்கள் உடனடியாக தம்மிடம் உள்ள உச்ச வளங்களை பயன்படுத்தி மனிதாபிமான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளமை வரவேற்கத்தக்கதே.
அதேபோல பல்வேறு நிறுவனங்களும், தங்கள் தங்கள் பங்கிற்கு உதவிகளை வழங்கினார்களேயானால், எம் சகோதரர்களின் நிலைமையை கொஞ்சமேனும் ஆறுதல் படுத்த முடியுமாக இருக்கும் அல்லவா?
இவை சர்வதேச தொண்டு நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கடமை என்று பேசாமல் இருந்துவிடாமல், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருமே தவிப்பது எங்கள் சகோரர்கள் என்ற உணர்வுகொண்டு ஒரு முறை இணைந்துநின்று கரம் கொடுத்து சேர்ந்தால்.. இதோ ஒரு இனிய இலங்கை உருவாகிவிடும் அல்லவா?
உலகில் மற்றுமொரு புதியநாடாக தென்சூடான்?
ஆபிரிக்க கண்டத்திலேயே பெரியநாடு சூடான். ஆனால் கடந்த 22 ஆண்டுகளாக அங்கே மக்கள் கண்டதெல்லாம், இரத்தம், இழப்பு, கோரம், கொடுமைகள்.
20 இலட்சம்பேரை பலிகொடுத்து, 40 இலட்சம்பேரை அகதிகளாக்கி, பல இலட்சம்பேரை பாதித்த ஒரு பிரச்சினை நிரந்தரமாக முடிவுக்கு வருவது உலகத்திற்கே சந்தோசமான வியடம்தான்.
அரேபியரை பெரும்பான்மையாகக்கொண்ட வடக்கு சூடான், தெற்கு சூடானை சுதந்திரநாடாக மலர்வதற்கு அங்கீகாரம் வழங்கியமை வரவேற்கப்படவேண்டிய பெரிய விடயமே. தீர்வுகளும் இன்றி, அமைதியும் இன்றி, மீண்டும்மீண்டும் இரண்டு பகுதிமக்களையும் தொடர்ந்தும் வாட்டிக்கொண்டிருப்பதைவிட இந்தமுடிவு எவ்வளவு மேலானது என்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தென்சூடான் மக்களிடம் சுதந்திரம் சம்பந்தமான வாக்களிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றுவருகின்றது. பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடிவுகள் உலகத்திற்கு தெரிந்துவிடும் என எதிர்வுகூறப்படுகின்றது.
60 வீதத்திற்கும் அதிகமான தென்சூடானிய மக்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கடந்த இரண்டு சகாப்த இருள் உலகத்திலிருந்து அந்த புதியதேசம் எழுந்துநிற்பதற்கு உலகநாடுகள் கைகொடுக்கவேண்டியதேவையும் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை புதிய தேசம் ஒன்று உருவாகினால் அதன் ஆரம்ப கட்டமைப்புக்கு உலகநாடுகள் ஆதரவை தரவேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பு தீர்க்கதரிசனமானது.
பெப்ரவரியில் ஜேம்ஸ் கமருனின் Sanctum
பசுபிக் என்ற பரந்த நீர்ப்பிரதேசம் உலகத்திற்கு ஒழித்துவைத்திருக்கும் ஆச்சரியங்களும், அதிசயங்களும் ஏராளம்…ஏராளம்..
அப்படி தென் பசுபிக் பிரதேசத்தில் இயற்கை அமைத்திருக்கும் பெரிய ஆச்சரியம் ஈசா ஹலா குகை.
இந்தக்குகையினை மையமாக வைத்தே இந்த திரைப்படம் சுற்றிவரப்போவதாகவும், ஒவ்வொரு கட்டங்களிலும், மர்மங்களும், திரிலிங்கும் இரசிகர்களை சிலிர்க்கவைக்க காத்திருப்பதாகவும் திரைப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பெப்ரவரி நான்காம் திகதி திரைப்படம் வெளிவரவுள்ளது சந்தோசமான விடயம். இந்தப்படம் 3 டி படம் என்பது அதைவிட சந்தோசமான விடயம்.
இந்தவாரக்குறும்படம்.
நிறமற்ற வானவில்.
எழுத்தாளர் சுஜாதா பல உணர்வுகளால் ஒவ்வொன்றுக்கு நிறங்கள் கொடுத்து, நிரப்பி வைத்த ஒரு புத்தகம் அவரின் “நிறமற்ற வானவில்”
சென்ற வாரம்முழுவதும் எனக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உணர்வை படிக்கையில் எற்படுத்திவிட்டது.
“ஒருமுறை தற்கொலையின் உச்சத்திற்கு சென்றவன் மறுமுறை தற்கொலைக்கு முயற்சிக்கமாட்டான்” என்பதை யதார்த்தமாக்கி, பின்னர் இறுதியில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்கும் கட்டத்தில் சுஜாதா சிரிக்கின்றார்.
வாழ்வின் கட்டங்களில் விபத்துக்கள் மிக அபத்தமானவை, நடப்பது ஒரு விபத்தே என்றாலும் அது மற்றவர்களின் வாழ்க்கையினையே எப்படி புரட்டிப்போட்டுவிடும் என்பதற்கு “நிறமற்ற வானவில்” கதை ஒரு சான்று.
ஒரே இரவில் மனைவியையும், மகளையும் பறிகொடுக்கும் ஒருவனின் அடுத்த கட்டம் என்ன? என்ற இடத்தில் கதை மட்டும் அல்ல. வாசிக்கும் நாமும் ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றோம். ஆனால் மீண்டும் ஒருவழியை கண்டுபிடித்து மெதுவாக நகர்த்தி சென்று அதிசயிக்க விட்டுவிடும் பாங்கு சுஜாதாவுக்கே உரியது.
வாசிக்காதவங்க ஒருமுறை வாசிச்சுவிடுங்க… அருமையான கதை
மியூசிக் cafe
டபிள் செஞ்சரி அடிச்சிட்டாரு உங்கள் ஜனா.
ஹலோ..உங்களுக்குத்தான் சொன்னேன் இதை. ஜெஸ்.. இந்த ஹொக்ரெயிலுடன் என் பதிவுகள் 200 என்ற இலக்கத்தை அடைந்துள்ளன. இவை அத்தனைக்கும் இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்க…ஹலோ..க்கம், பின்னால எல்லாம் பார்க்காதீங்க..நீங்க…நீங்க.. மட்டும்தான் காரணமுங்க.
உங்க புண்ணியத்தில இதோ 200 பதிவுவரை எழுதி முடிச்சுட்டேன்.
இங்க நின்று திரும்பி ஒன்றும் பார்க்கலை.. மேலே போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். நான் பதிவு எழுத வந்து மற்றவர்களுக்கு பிரயோசனமோ இல்லையோ எனக்கு ரொம்ப பிரயோசனம் என்றுதான் ஆணித்தரமாக நம்புறேன். குறிப்பாக ஓய்வுநேரங்களை பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டதை சொல்லலாம். பதிவுகளாலும், வாசித்தலாலும் எனக்கு உண்மையில் பெரிய ரிலாக்ஸ் கிடைத்துள்ளது. அதிகளவிலான பல துறைகளை சார்ந்த, பல வயதுகளை உடைய நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.
பல பெரியவங்க சில, சில பதிவுகளுக்கு வாழ்த்தியிருக்காங்க, பல பத்திரிகைகளில் நன்றி இணையம் என்று நம்ம பதிவுகளை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். (என்னில் அப்படி நம்பிக்கையில என் எழுத்துப்பிழைகள்கூட பத்திரிகைகளிலும் சில இடங்களில் பிழையாகவே வருகின்றது)
இப்படி… ஏராளம்.. அத்தனைக்கும் காரணங்களில் இதோ…வாசித்திட்டிருக்கின்றீர்களே…நீங்களும் ஒரு காரணம்தான்.
உங்களுக்கு நன்றிகள். ஸியேஸ்...
ஜோக் பொக்ஸ்..
ஒரு பையன் தன் தாத்தாகிட்ட கேட்கிறான்.
“தாத்தா நான் எப்படி பிறந்தேன்”?
உங்க அம்மா வயித்திலை நீ இருக்கும்போது நீ உள்ள அழுதாயா, அம்மா வயித்தை வெட்டி உன்னை வெளியே எடுத்தோம்.
“அப்போ அப்பா எப்படி பிறந்தார் தாத்தா”
உங்க அப்பம்மா வயித்தில அவன் இருந்தானா, அப்பம்மா வயித்தை வெட்டி அவனை வெளியே எடுத்தோம்.
“ரெரிபிள்.. அப்ப நீ எப்படி தாத்தா பிறந்தாய்”
நானும் என் அம்மா வயித்தில இருக்கும்போது அவ வயித்தை வெட்டி என்னை வெளியே எடுத்தாங்கடா கண்ணா
“போ தாத்தா..அப்போ நம்ம பரம்பரையிலேயே நோர்மல் டெலிவரி கிடையாதா”?
18 comments:
சூப்பர் . தலைவர் சுஜாதா பற்றிய கருத்துக்கள் நூறு சதவிகிதம் உண்மை
டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் ஜனா! கொக்ரயில் அருமை.. சுஜாதாவின் பல நூற்களை வாசித்திருக்கின்றேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருப்பது எனக்கு அற்முகமற்றது.. தேடி வாசிக்க வேண்டும்.. நன்றிகள்.
இன்னும் எழுதுங்கள்... சச்சினின் சாதனையை பதிவால் முறியடிக்க வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!
வாழ்த்துக்கள் ஜனா அண்ணா...
கிழக்குமாகாண மக்களுக்கு துன்பத்தின்மேல் துன்பம்...
ஜேம்ஸ் கமரூனின் திரைப்படத்தை நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் எல்லாம் அவதார் செய்த மாயம்
குறும்படம்..இந்த படத்தை எடுத்தது எனது நண்பர் என்று கூறிக்கொள்ளுவதில் பெருமையடைகின்றேன் நானும் அதில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றென் முடிந்தால் கண்டுபிடியுங்கோ....
//“ஒருமுறை தற்கொலையின் உச்சத்திற்கு சென்றவன் மறுமுறை தற்கொலைக்கு முயற்சிக்கமாட்டான்”//
நானும் அதியசப்பட்ட வசனம் எவ்வளவு ஆளமான வசனம் அது
பாடல் அருமை... நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி
200 பதிவுகள் வாழ்த்துகள் ஜனா அண்ணா
ஜோக்ஸ்... :))))
வாழ்த்துக்கள் தலைவரே. விபரிக்கமுடியாத நட்பு இருந்தாலும் தங்களால் ஏற்கமுடியாத கருத்துக்களை காத்திரமாக இல்லாமல் மிக இயல்பாக மற்றவர்களுக்கு நோகாமல் இதமாக சொல்லிவிடும் உங்கள் அன்பான எழுத்துநடை ரொம்ப பிடிக்கும்.
நாங்கள் சில வேளைகளில் உங்கள் கருத்துடன் உணர்ச்சிவசப்பட்டு நின்றாலும், கோபப்பாடமல், சலனப்படாமல் மென்மையாக விவாதிக்கும் உங்கள்போக்கு பல தடவைகள் வியக்கவைத்தது நண்பா. 200ற்கு வாழ்த்துக்கள். எக்காலத்திலும் எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்.
அடுத்த ஒன்று நாங்கள் யாரையும் துரோகிகள் என்றவில்லை. அனைவரும் நண்பர்களாக இருக்கவே விருப்பபடுகின்றோம்.(உங்களுக்கு அல்ல உங்களின் சில நண்பர்களுக்கு)
200 க்கு வாழ்த்துக்கள் ஜனா அண்ணா
முதலில் இரட்டை சதத்திற்கு என் வாழ்த்துகள்....
:)
200 க்கு வாழ்த்துக்கள் ஜனா அண்ணா :)
வாழ்த்துக்கள் அண்ணா பதிவு படிக்கல நேரம் பத்தல மீண்டும் வருவேன்... மிக்க சந்தோசமாய் திரும்பிச் செல்கிறேன்... இந்த உலகத்தில் எல்லோரும் உறவுகள் தான் தீபாவளியன்று எப்படி இருந்தேனோ அப்படியே தான் இருக்கிறேன் மீண்டும் அந்த கசப்பான மறு நாளை நான் வாழ்வில் நினைக்கப் போவதில்லை...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..
மழை...-
மனதை கனக்க வைக்கும் கடும் வேதனையில் நம் உறவுகள்......
சூடான்-
வாழ்த்துகள் மக்களே..
குறும் படம்....அருமை
நாவல்...அறிமுகம்
பாடல்....என் அபிமானம்
வாழ்த்துக்கள் ஜனா அண்ணா :200 க்கு )
அண்ணா 200 பதிவுக்கும் 20000 பதிவு எழுதவும் வாழ்த்துக்கள்.. அனர்த்த நிலமையை முக்கியப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்..
200 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் நண்பா.
பனையாலை விழுந்தவனைக் கதைதான் கிழக்கு மாகாண வெள்ளம்.
தென்சூடானுக்கு வாழ்த்துக்கள்.....
ஜேம்ஸ் கமரூனை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
தலைவர் சுஜாதாவின் பரம ரசிகன் நீங்கள் எனத் தெரியும், ஆனாலும் நான் வாசிக்காத கதைகளைப்போட்டு வெறுப்பேற்றுகின்றீர்கள். சில சுஜாதாவின் கதைகள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உங்களின் லண்டன் பயணத்தின் போது கொண்டுவரவும் வாசித்துவிட்டு மீண்டும் திருப்பித் தருவேன்.
கிளாசிக் பாடல் மெல்லிசை மன்னர் கலக்கி இருப்பார். நம்ம உலகநாயகனும் உலகநாயகியும் அசத்தி இருப்பார்கள். இப்ப பார்க்கலாமில் எஸ்.ஜானகியும் கலக்கியிருப்பார்.
இப்போதைய பிள்ளைகள் ரொம்ப முன்னேற்றம்..
வாழ்த்துக்கள் ஜனா அண்ணா, வழமை போல அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது,
///Vathees
நானும் அதில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றென் முடிந்தால் கண்டுபிடியுங்கோ....//
வதீஸ் நீங்க காமெராவுக்கு வெளியால நிண்டு தனிய நடிச்சுக்கொண்டு இருந்தீங்களா? படம் முழுக்க தேடிப்பார்த்திட்டேன்... காணல...
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்....ம்ம் இந்தவருடமே சோகத்துடன் தொட்ங்குகிறது எங்கள் சகோதரர்களுக்கு...என்ன செய்ய...?
//பசுபிக் என்ற பரந்த நீர்ப்பிரதேசம் உலகத்திற்கு ஒழித்துவைத்திருக்கும் ஆச்சரியங்களும், அதிசயங்களும் ஏராளம்…ஏராளம்..//
ஆகா! எங்கயோ கேட்டமாதிரி இருக்கே! 'அடுத்தநொடி...'
தலைவர் பற்றி எழுதி இருக்கீங்க (நான் வாசிக்கல...பாக்கலாம்!)
200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! :-)
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வருத்தம் தரும் விடயம்.
Post a Comment