“சுடுசோறு” தமிழ் பதிவுலகமே அதிசயத்துடனும், ஆச்சரியத்துடனும் கேட்டுக்கொண்ட புதியதொரு வார்த்தை. இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் பதிவர். திரு.மதி.சுதா அவர்கள்.
ஒரு கலைஞனோ அல்லது ஒரு எழுத்தாளனோ, அன்றில் ஒரு வலைப்பதிவனோ, தன் கலைகள், எழுத்துக்கள்போலவே மற்றவர்களின் கலைகள், எழுத்துக்களை திறந்தமனதுடன் ஓடிச்சென்று பாராட்டிவிடும் மனம் உள்ளவனாக இருப்பது அவசியம்.
வஞ்சகமற்ற வாஞ்சையுடனான உடனயடியான பாராட்டுக்கள், களங்கங்கள் அற்ற நட்புகளை ஏற்படுத்திவிடுவது மிக இயல்பானது, யதார்த்தமானதும் கூட.
அப்படி ஒரு வெள்ளை மனதுக்காரன் பதிவர் மதி.சுதா.
மதி.சுதா என்ற ஒரு பெயர் இன்று பதிவுலகத்தில் மிகப்பிரபலம். ஏனென்றால் மதி.சுதா அத்தனைபேருக்கும் சொந்தக்கார் என்பதுடன் மிக நெருக்கமானவன் என்ற உணர்வுகள்தான். சலிப்பற்ற தொடர்வாசிப்பு, ஈகோக்களை தூக்கி எறிந்த ஒரு பண்பு, அதிரடியான பதிவுகள், இயல்பான மிக லேசான நடைகளுடனான எழுத்துக்கள், எழுத்துக்களில் மட்டும் இன்றி செயல்பாடுகளிலும் வாஞ்சையான பண்பு, இவற்றின் மொத்தப் பெயர்தான் இந்த மதி.சுதா.
தில்லையம்பலம் சுதாகரன் என்ற இயற்பெயரை உடைய பதிவர் மதி.சுதா, தனது தாயாரான மகேஸ்வரியின் “ம”, தந்தை தில்லையம்பலத்தின் “தி” இரண்டையும் தன் பெயரின்முன்னே “மதி” ஆக்கி பதிவுலகத்தில் மதி.சுதா என்ற பெயருடன் ஆயிரம் கைகளின் கரகோசங்களுடன் வலம்வந்துகொண்டிருக்கின்றார்.
அதேபோல முன்னரே “சுடர் ஒளி” பத்திரிகைக்கு எழுதிய தாய் பற்றிய தனது கவிதையுடன் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன்மாதம் பதிவெழுத தொடங்கி தன் முதன் பதிவையே தனது தாய்க்கு சமர்ப்பித்து பதிவுலகத்திற்கு வந்தார்.
ஆரம்பத்திலேயே ஒரு சென்டிமென்ட் “டச்” உடன் வந்த மதிசுதா, பதிவுலகத்திலும், பதிவெழுதுவதிலும் காட்டியவிஸ்பரூபம் பதிவுலகத்தையே ஆச்சரியப்படவைத்தது.
காட்டாறு உடைப்பெடுத்தால் எப்படி கரைபுரண்டோடுமோ, தன் போக்கிற்கு எப்படி அது எதிர்ப்பட்டவற்றை எல்லாம் ஈர்த்துக்கொள்ளுமோ அப்படி ஒரு காட்டாறாக பெருக்கெடுத்தது மதி.சுதாவின் பதிவுகள்.
ஒரு சவலாக வேண்டும் என்றாலும் சொல்லிவிடலாம் பதிவெழுத தொடங்கி சில நாட்களிலேயே மிகப்பெரும் பிரபலம் அடைந்து, எண்ணற்ற நண்பர்களை தனக்குள் ஈர்த்துக்கொண்டது இன்றுவரை மதி.சுதாவைத்தவிர வேறு எவரும் கிடையாது.
அந்த வேகத்திற்கும், அந்த எழுத்துக்களுக்கும், அந்த தொடர்ச்சிக்கும், காரணம், கடந்தகால வரலாற்றுவடுக்களால் மதி.சுதாவின் மனதின் தாக்கங்கள், ஏக்கங்களாகக்கூட இருக்கலாம். இதுகூட மதி.சுதாவின் பல பதிவுகளில் வெளிப்படையாகத் தெரிந்தன.
கவிதை, இலக்கியம், விஞ்ஞானம், புதிய, பாரம்பரிய, கிராமிய கண்டுபிடிப்புக்கள், சமுகத்தின் மீதான சாட்டைகள், யதார்த்தங்கள், சினிமா, கதைகள் பற்றிய ஆராட்சிகள், என பல வடிவங்களையும் மதி.சுதாவின் எழுத்துக்கள் தொட்டுக்கொண்டன.
கவிதைகளில்க்கூட அறிவியலைப்புகுத்தும் நுட்பம், சாதாரண நிகழ்கால உள்ளுர் கண்டுபிடிப்புக்களைக்கூட காலப்பதிவாக எழுத்தில் அடக்கும் பண்பு என மதி.சுதா எழுத்துக்களால் தொடும் விடயப்பரப்புக்கள் சில மூக்கில் விரலை வைக்க வைக்கின்றது.
பதிவெழுதத்தொடங்கி முழுதாக 7 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், மதி.சுதா சாதித்துக்காட்டியவை மிகநிறைய. பெரும் ஆர்வக்கோளாறு மதி.சுதா என சக பதிவர்கள் வெளிப்படையாகவே பேசும் அளவிற்கு உண்மையிலேயே பதிவுலகில் பெரும் ஆர்வக்கோளாறாகவே மதி.சுதா அதிவேகத்துடன் வலம் வந்துகொண்டிருக்கின்றார். தன் பின்னூட்டம் என்னும் மிகப்பெரும் பானையில் இருந்து, பதிவுலகத்தின் 70 வீதத்திற்கும் அதிகமான பதிவர்களுக்கு சுடச்சுட சுடுநோறுகளை வழங்கி ஆச்சரியப்படவைத்திருக்கின்றார்.
இது வேறு எந்த பதிவர்களுக்கும் சாத்தியப்படாத விடயம். உண்மையை சொல்லவேண்டும் என்றால், எதிர்பார்ப்புக்கள், ஈகோக்கள், பதிவுலக வீணான குரோதங்கள், தங்களுக்கான வட்டங்கள், மமதைகள், பதிவுலக அரசியல்கள், அத்தனையையும் தாண்டிய ஒரு தெளிந்த மனம், வெள்ளை உள்ளம் உடையவர்களாலேயே இது சாத்தியம். அந்த வகையில் பதிவுலகத்தில் சகலரையும்விட உயர்வான இடத்தில் இருக்கின்றார் மதி.சுதா.
கடந்த 30 வருட இருண்ட யுத்தத்தினால், உயிர், உடமை இழப்புக்களைவிட, தமது கற்ற கல்வி, எதிர்காலம், நாளைகள் அத்தனையையும் தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதிகளில் மதி.சுதாவும் ஒருவர்.
இருந்தபோதிலும் நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு. அதே தொனிகள் எழுத்துக்களிலும் ஆங்காங்கே வருவதை அவதானிக்கலாம்.
இதோ இந்தவாரப்பதிவரான மதி.சுதாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான அவரது சுருக்கமான பதில்களும்…
கேள்வி: உங்களைப் பற்றி நீங்களே சொன்னால் ?
மதி.சுதா: அதை நான் சொல்லித் தான் தெரியணுமா. செம காமடியன்... மூஞ்சியை வெள்ளையாக்க முயன்றேன் முடியல அதலா மூணு வேளையும் பல்லைத் தீட்டி வெள்ளையாக்கி அதையே காட்டுகிறேன் (இருக்கிறதத் தானே காட்டலாம் நான் என்ன நடிகையா பஞ்சு வச்சுக் காட்ட ஹ..ஹ..ஹ..)
கேள்வி: இந்தப் புத்தாண்டில் நீங்கள் விரும்புவது ?
மதி.சுதா: என் பேச்சும் மூச்சும் ஒரே வாக்கியம் தான் போரற்ற ஒரு புது உலகம் சமைப்போம். எம் உயிரையும் உணர்வுகளையும் வைத்து புதுப் போரை நடத்தும் அந்தச் சமூகம் தாமே தம் பிள்ளைகளை கொடுத்து வழமை போல் பணம், புகழ் சம்பாதிக்கட்டும். இனி நான் குளிர் காய்கிறேன்.
கேள்வி: பதிவுலகில் உங்களைப் பாதித்த சம்பவம் ஏதாவது ?
மதி.சுதா: நான் என்ன தமிழா "கல் தோன்றி மண் தோன்றாக் காலம்" எனத் தொடங்க முந்த நாள் பெய்த மழையில நேற்று முளைத்த காளான் நான் (ஒரு பெரிய சிரிப்பு) ஆனால் இருக்கிறது.
என்னை ஒரு ஜனநாயகவாதி எனவும் ஈழத் தமிழருக்கு எதிரானவன் எனவும் ஒரு சிலர் முத்திரை குத்த முயல்கிறார்கள். புளியங்காய் புளிப்பு என ஒருவனின் முகத்தை வைத்து சொல்ல முடியாது அது ஒருவனின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் போரை வெறுப்பவன் எல்லாம் தேசத் துரோகி என்றால் ஆதரிப்போன் மட்டும் தான் நாட்டப்பற்றாளரா ??
உண்மையில் இந்தப் பதிவுலகம் மிகவும் பிடித்தமான ஒன்று உலகின் எங்கெங்கோ மூலைகளில் உள்ள இத்தனை உறவையும் பெற்றுத்தந்துள்ளது.... என் அன்பு உறவுகளுக்கு எப்போதும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன் நன்றிகள்..
ஆனால் இந்த எழுத்துக்களையும் நட்புக்களையும் மெருகேற்றிக்கொள்ளும் இடத்தில் ஏற்படுகின்ற தேவையற்ற எழுத்து தாக்குதல்களும், சிலருக்கிடையிலான மனக்கசப்புக்களும், மனதிற்குள் வேதனைகளை தருகின்றன.
மற்றும்படி ஆரோக்கியமான இந்த தளத்தில் எம்மையும் , எழுத்துக்களையும் அரோக்கியமாக்குவோம் என்ற கருத்தில் நான் எப்போதும் உறுதியாக இருக்கின்றேன்.
அதனாலேயே எனக்கு அதிமான நட்புக்கள் கிடைத்தன என நினைக்கிறேன்.
மதி.சுதாவின் மதியோடையில் நனைவோமா?
சரி..அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மற்றும் ஒரு பதிவுலக நண்பர் பற்றிய தகவல்களுடன் உங்களை சந்திக்கின்றேன்.
நன்றி
28 comments:
ம.தி.சுதாவின் அறிமுகத்திற்கு நன்றி! ஆரம்பத்தில் நான் இவரை ஒரு பெண் என்றே நினைத்தேன் (மதி சுதா)!
ஊடகங்கள் பிரசுரிக்கத் தயங்கும் சில உண்மைகளை எழுதுகிறார்! - சிறப்பு!
சுடுசோறு என்ற சொல்லின் வரலாற்றை அறிந்து சொல்லியிருக்கலாம். :-(
அடடா...நம்மாளு??? வணக்கம் மதி.சுதா
ஆனால் நிறைய இடங்களில் மனிதர் சுடுசோறு வாங்கும்போது எப்படி இவரால் மட்டும் என்று யோசித்திருக்கிறேன்.
எல்லோருக்கும் விரைந்து பின்னூட்டமிடுவதைக் கண்டு வியந்துமிருக்கிறேன்.
வாழ்த்துக்கள் மதி சுதா! பதிவுலகில் நீங்கள் கூறியதுபொல ஈகோ இல்லாத முதல் பதிவர் இவராகதான் இருப்பார்! புதியவர் பழையவர் பிரபலமானவர் பிரபலமாகாதவர் என பேதம் பார்க்காது அனைவரது பதிவுகளையும் வாசித்து பதில் போடும் ஒருவர் இவர்!
பகிர்வுக்கு நன்றி
உண்மைதான்! ஈகோ பார்க்காமல் புதியவர்களை ஊக்குவிப்பது...பதிவர் எஸ்.கே யும் அப்படியான ஒருவர். இந்த நல்ல, ஆரோக்கியமான மனப்பாங்கை அதிகமாக/அநேகமாக இந்தியப் பதிவர்களிமே நான் கண்டிருக்கிறேன்!
அதுதான் இங்கே பலருக்கு மதி.சுதாவின்'ஆர்வக்கோளாறு'த்தனமாகத் தெரிகிறது! :-)
வணக்கம் மதி.சுதா :)
// புளியங்காய் புளிப்பு என ஒருவனின் முகத்தை வைத்து சொல்ல முடியாது அது ஒருவனின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் போரை வெறுப்பவன் எல்லாம் தேசத் துரோகி என்றால் ஆதரிப்போன் மட்டும் தான் நாட்டப்பற்றாளரா ??//
என்னே வரிகள்!
"எனக்குத் தன் சுடுசோறு" எனும் இவரின் பின்னூட்டம் குறைந்தது பத்து முறையாவது பெற்ற பாக்கியோன் நான்.
சுதாவுக்கு வாழ்த்துக்கள்!
அறிமுகத்துக்கு நன்றி திரு.ஜனா!
வாவ்..
பரபரப்பு பதிவரான அவரைப்பற்றி தெரிந்து ஆவலாக இருந்தேன்...
விரிவான அறிமுகம் கொடுத்ததற்கு நன்றி..
உங்களைப்பற்றியும் ஒரு விரிவான அறிமுகம் தேவை..
அட அவரைப் பற்றிய பதிவுக்கு சுடுசோறு சாப்பிட இன்னமும் அவர் வரவில்லையா? அவரது காசால் செல்போனை மின்னேற்றும் பதிவைப் பார்த்துத்தான் அம்முறையையே தெரிந்துக் கொண்டேன்
ஆவ் சுடுசோறு...
எனக்கும் இவர் பற்றி தெரியும் உங்களால். நானும் சில தடவைகள் இவருடன் பேசிஇருக்கிறேன். நீங்கள் எழுதியவை அனேக இடங்களை இவருடன் பேசும்பொழுதுகளில் பெற்றிருக்கிறேன்.
///இது வேறு எந்த பதிவர்களுக்கும் சாத்தியப்படாத விடயம். உண்மையை சொல்லவேண்டும் என்றால், எதிர்பார்ப்புக்கள், ஈகோக்கள், பதிவுலக வீணான குரோதங்கள், தங்களுக்கான வட்டங்கள், மமதைகள், பதிவுலக அரசியல்கள், அத்தனையையும் தாண்டிய ஒரு தெளிந்த மனம், வெள்ளை உள்ளம் உடையவர்களாலேயே இது சாத்தியம். அந்த வகையில் பதிவுலகத்தில் சகலரையும்விட உயர்வான இடத்தில் இருக்கின்றார் மதி.சுதா.
கடந்த 30 வருட இருண்ட யுத்தத்தினால், உயிர், உடமை இழப்புக்களைவிட, தமது கற்ற கல்வி, எதிர்காலம், நாளைகள் அத்தனையையும் தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதிகளில் மதி.சுதாவும் ஒருவர்.
இருந்தபோதிலும் நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு. அதே தொனிகள் எழுத்துக்களிலும் ஆங்காங்கே வருவதை அவதானிக்கலாம்.///
இந்தவரிகள் நல்லா இருக்கே.
அவர் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் இலங்கை இந்திய பதிவர்கள் என்றதைப்பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கலாம்..
பகிர்வுக்கு நன்றி
அடடே நம்ம சுடுசோறு ம.தி.சுதா அண்ணே..:)
@ம.தி.சுதா அண்ணே - இங்கு பின்னூட்டி எல்லாருக்கும் வந்து சுடுசோறு தரவேணும்..ok..:P
மதி சுதா அண்ணா பற்றி சொன்ன அனைத்தும் உண்மை ஜனா அண்ணா!!!
//என்னை ஒரு ஜனநாயகவாதி எனவும் ஈழத் தமிழருக்கு எதிரானவன் எனவும் ஒரு சிலர் முத்திரை குத்த முயல்கிறார்கள். புளியங்காய் புளிப்பு என ஒருவனின் முகத்தை வைத்து சொல்ல முடியாது அது ஒருவனின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் போரை வெறுப்பவன் எல்லாம் தேசத் துரோகி என்றால் ஆதரிப்போன் மட்டும் தான் நாட்டப்பற்றாளரா ??
//
இதில் கடைசி வரிகள் எனக்கு பிடித்து இருக்கிறது
ஒரு வலைப்பதிவாளனுக்கு இருக்க வேண்டிய முக்கிய விடயமான சக வலைப்பதிவாளனை புரிந்து கொள்ளல் சகோதரர் மதி.சுதாவுக்கு அதிகம் உண்டு.
மதி.சுதா பதிவுலகில் பல ஹிட் பதிவுகளை கொடுத்து, பல விருதுகளை பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
நண்பேண்டா என்பதை போல் போல மதி.சுதா ஒரு பதிவேண்டா.....
மனதை
திருடிய
சுதந்திர
தாகம்
அறிமுகமான நாளிலிருந்து இன்றுவரை ஆயிரமாயிரம் கதைகள் பேசி...
உலகப்புகழ் கிடைத்தாலும் தினமும் போன் செய்து தங்கள் பாஸ்வேட்டுக்கு என்னாச்சு என்று தோழமையோடு கேட்கும் மனிதருள் மாணிக்கம்.
இவர் எழுத்துகளுக்குள் சமூகப்பிரச்சனையை கொண்டுவரும் முறைகளை கண்டு வியந்திருக்கின்றேன்.
பின்னர் தான் ரெிந்தது ஊடகங்களில் வந்த பல சமூகபிரச்சனைகள் இவரது நெருங்கிய நண்பர்கள் என்று.
வானமே வீழ்ந்தாலும் மானமே பெரிதென நினைக்கும் கவரிமான் ஜாதி இவன்.
இவரது எழுத்துகள் எவ்வளவு துணிச்சல் மிக்கவை என்பது எல்லோருக்கும் தெரியும் அவை இவர் மனதிலிருப்பதன் 5% கூட இல்லை என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
அண்ணே சுடுசோறு கிடைக்குமா சுடுசோறு. உண்மையில் சகபதிவர் மதிசுதா ஒரு சமாதான புறா போல எல்லா தளங்களிலும் அண்மையில் நாம் காணக்கூடிய முதல் பின்னூட்டம் இவரதுதான். நீங்கள் சொன்னதுபோல எல்லோருக்கும் போதுவானவனாக இருந்து இப்போது கலக்குவது அவர் தான் வாழ்த்துக்கள். அப்புறம் அண்ணே உங்க சோறு எப்போ ஆறும்...
அண்மையில்த்தான் நேரே சந்திக்கக்கிடைத்தது.
வாழ்த்துக்கள் மதி சுதா.தொடர்ந்து கலக்குங்கள்.
பயங்கர சுறுசுறுப்புடனும் மனசு நிறைந்த மகிழ்ச்சியுடனும் ஒவ்வொருவருக்கும் முகமன்கூறி வரவேற்றுக்கொண்டிருப்பதற்குப் பெரிய மனது மட்டும் போதாது, தம்முடைய சொந்த வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டுச் செயற்படுகின்ற பொதுநலன் சார்ந்த பார்வையும் அவசியம். மனது கொள்ளாத அன்பு கொண்ட ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய சரியான தகவல்களைப் பரிமாறிக்கொண்ட உங்களுக்கும் பாராட்டுக்கள்.
என் அனைத்து உறவுகளுக்கும் நன்றி... அத்துடன் ஜனா அண்ணா மிக்க நன்றி...
அண்ணா மன்னிக்கவும்....நான் வர ரொம்பவே பிந்தீட்டுது...வீட்டுக்கு உறவினர்கள் வருகை...நேரம்....???
சுதா அண்ணா...உங்களை நான் அடையாளம் கண்டது வெற்றியின் அலைகளில் தான்...பின் முகபுத்தகத்தில் உறவானோம்....
அடிக்கடி பதிவுலகுக்கு வா வா என்று என்னை விடாமல் தொடர்ந்து இங்கு கொண்டு வந்து விட்டீர்கள்...நிறைய புதிய உறவுகள் இன்று எனக்கு...அத்தனைக்கும் காரணமானவர் தாங்கள்...என் ஆத்மார்த்தமான நன்றிகள்...வாழ்த்துகள்..தொடர்ந்தும் எழுதுங்கள்...காலம் உங்கள் கைகளில்........
நம்ம சுடு சோற்றுச் சகோதரத்தைப் பற்றி நல்ல அலசல்.
இந்தப் பதிவில் மட்டும் அவரால் சுடுசோறு உண்ணமுடியவில்லை ஹிஹிஹி.
தம்பி சுதாவுக்கு வாழ்த்துக்கள்... அவரைபற்றி கூறிய ஜெனாவுக்கு நன்றிகள்...
அருமை ஜனா..
வாழ்த்துகள் சுடு சோறு சுதா :)
என்னையும் அடிக்கடி ஆச்சரியப்பட வைத்த ஒரு பதிவர்.
பல துறைகளிலும் பிளந்து கட்டுகிறார்.
உங்கள் பாராட்டுக்கள் அத்தனைக்கும் மிகப் பொருத்தமானவரே..
மதிசுதாவின் பதில்களில் அவரது வெள்ளை மனதும் வெகுளி இயல்பும் தெரிகின்றன.
வியப்பான ஒரு பதிவர்...
எனது பதிவுக்கு முதன்முதலில் கருத்து இட்டவர்.
நன்றி
ஊதாரிகளாக திரியும் உறவுகளுக்கிடையிலே உதாரணமாக திகழும் சுதா என் உறவுக்காரன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்
நான் கூட இவரை திருமதி சுதா என்றல்லவா நினைத்தேன்.
கவலை வேணாம் சுதா அண்ணா.fair & handsome பயன்படுத்தி பாருங்க கொஞ்சம் வெள்ளையா வருவீங்க.ஹ ஹ ஹ ஹா........
Post a Comment