ஏதேதோ சப்தங்கள்
எங்கிருந்தும் ஆனந்த கோஷங்கள்..
எந்மொழி புரிவில்லை, பலமொழிகளின்
கலவைகள் அவை..
ஸ்பரிசங்களில் ஆனந்தம்..
முகர்ச்சிகளில் ஆனந்தம்..
உணர்வுகளில் ஆனந்தம்..
கதகப்பு சூழலும் ஒரு அனந்தம்.
ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சி..
என்மீது பூக்களின் சொரிவு..
மேலே பார்த்தால்..
கண்ணடித்து சிரிக்கின்றது ஒரு அணில்..
நடப்பது நிஜம்தானா..
கைகளில் வலியுடன் இரத்தம்வேறு வந்துவிட்டது.
வசந்தமான உணர்வு..
மனம் நினைக்கின்றது..
முன்னே ஒரு அழகான பூங்கா..
அப்போதுதான் கண்முன்னே பரினாமிக்கின்றது!!
வசந்தங்கள் என்றால் உடனே பூங்காதானா?
மனதின் சந்தேகம் முற்றுப்பெறுவதற்குள்..
பரிநாமம் நின்றுவிடுகின்றது..அங்கே வெறுமை.
ஓ… நீ இந்தரகம் அல்வா?
அந்தவெறுமையில் ஒரு முகக்குறிப்பு..
ஒரு மரத்தினால் ஆன பழமையான..
ஆனால் அழகான கட்டம் பரினாமிக்கின்றது.
உந்துதலுடன் உள்ளே செல்கின்றேன்
முப்பரிமானம்தாண்டிய அற்புதமாக அது..
சுவாசத்தில் புதிய புத்தகங்களின் வாடை..
எங்கே புத்தகங்கள்.????
ஓன்றையும் காணவில்லை..
ஒரு தேனீர்க்குடுவை..
அது வைத்திருந்த அழகியமேயை
என்னை அருகே அழைப்பதுபோன்ற உணர்வு
உற்றுப்பார்க்கின்றேன்..
குடுவையின் வாய்..எதையோ
உறிஞ்சுகின்றது…
ஆம் இதோ…இதோ…
ஷேக்ஸ்பியர், டாட்ரோய்ட், நெரூதா..பாரதி,
தூகூர், எனக்கு புகைப்படமாக தெரிந்தவர்கள்
உட்பட பலரின் புத்தகங்கள் அந்த உறிஞ்சலில்
வரிசையாக அதற்குள்ளே சென்று கொண்டிருந்தன.
கைகளில் மயிரிக்கூச்சம், தன்னிச்சை செயலாக
குளிருடன் ஒரு சிறு தலையாட்டம்..
எதுவுமே புரியாத ஒரு இதுவில் நான்..
அத்தனையும் அதன் உள்ளே போய்விட்டாலும்..
குடுவை அதே அளவிலேயே…
அநிச்சை செயலாக ஓடிச்சென்று
குடுவையை தூக்கி, அதற்குள்ளே
திராவகம் இருப்பதை உணர்ந்து குடிக்கின்றேன்..
எங்கேயும் நுகர்ந்திரா சுகந்தமான மணத்துடன்..
இனிப்பும், உறைப்பும் சேர்ந்ததுபோன்ற ஒரு பாணம்..
ஒருதுளி மிச்சமின்றி குடித்துவிட்டு
எதையோ தேடுகின்றேன்…
ஆம்..நான் தொலைந்துபோனேன்..
என்னைக்காணவில்லை..
எங்கும்வெறுமை…
வெறுமை..
வெறுமையைத்தவிர வேறொன்றும் இல்லை.
திடுக்கிட்டு கண்விழித்துக்கொண்டு
விளக்கைப்போட்டு..யோசித்துக்கொண்டே
கண்ணாடியைப் பார்க்கின்றேன்..
அங்கே நான் இல்லை.
8 comments:
ம்ம் உங்கள் கவிதை..அருமை..
////ஓன்றையும் காணவில்லை..
ஒரு தேனீர்க்குடுவை..
அது வைத்திருந்த அழகியமேயை
என்னை அருகே அழைப்பதுபோன்ற உணர்வு
உற்றுப்பார்க்கின்றேன்..////
எனக்கும் கண்கள் வலிக்கிறது வரிகளைப் பார்த்து அருமை அண்ணா..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்
எடிட் செய்தால் பிரமாதமான கவிதை கிடைக்கும் ...
அண்ணே.. கனக்க புத்தகங்களை படிக்கிறீங்கள். அதுதான். அது சரி இதில் இரண்டு கனவுகள் இருக்கா?
நான் இந்தக் கவிதை ஏரியால வீக்கு!
ஏதோ புரிந்த மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு!
ஏதோ மொழிமாற்றுக் கவிதை மாதிரி ஒரு சாயலும் இருக்கு!
திரும்ப வாசிக்க முடியல கண் வலிக்கச் செய்கிறது! :-(
ஓன்றையும் காணவில்லை..
ஒரு தேனீர்க்குடுவை..
அது வைத்திருந்த அழகியமேயை
என்னை அருகே அழைப்பதுபோன்ற உணர்வு
உற்றுப்பார்க்கின்றேன்..
குடுவையின் வாய்..எதையோ
உறிஞ்சுகின்றது…
ஆம் இதோ…இதோ…
....nightmare!!!!!!!!!
புகைப்படம் வெகு அழகு.
சூப்பர் அண்ணா...கருத்தாழத்துடன் கற்பனையும் கலக்கும் போது வரும் தரமான படைப்புகளில் உங்கள் படைப்புகளும் ஒன்று..அவற்றில் இதுவும் ஒன்று..!
Post a Comment