Wednesday, January 12, 2011

ஸ்கவுட்டிங் டேய்ஸ்…

“தீச்சுடர் மேல் எழும் செந்நிறம் பரவிடும், காரிருள் விலகியே ஒளிபெறும்” என்ற பாசறைப்பாடல் காதுகளில் நுளைந்து ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, அந்த இரவு சூழ்நிலையை மகிழ்ச்சியுடைதாக ஆக்கிவிடும். நடுவிலே தீமூட்டப்பட்ட நெருப்பு இரவுக்கு இதமாக கனந்து எரிந்துகொண்டிருக்கும், சக சாரணர்களின் உடல்தகதகப்பும், பாடலுக்கு எற்ப கைதட்டி கோரஸாக பாடும் தன்மையும் இனிமையான உணர்வுகளை மனதிற்குள் கொண்டுவந்துவிடும்.

ஆம்… சாரணியம் ஒரு மனிதனை முழுமையுடையவனாக ஆக்கிவிடுகின்றது.
சாரணியம் இயற்கையை நேசிக்க கற்றுத்தருகின்றது, சாரணியம் ஒருவனின் ஆளுமைகளை தட்டி எழுப்பிவிடுகின்றது, சாரணியம் அன்பை உணரவைக்கின்றது.
சாரணியம் வாழ்வை சொல்லித்தந்துவிடுகின்றது. தனியே சாரணியம் ஒரு சேவை இயக்கம் என்று உள்ள வரையறைகளை கொஞ்சம் தூக்கி எறிந்துவிடுங்கள்.

“முதலாவது யாழ்ப்பாணம்” இதுவே எங்கள் கல்லூரியின் சாரணிய அணியின் இலக்கப்பட்டி. அந்த இலக்கப்பட்டி என் வாழ்வை நெறிப்படுத்தவும், தலைமுமைத்துவ பண்புகளுக்கு வழிகாட்டியாக அமைந்துவிடப்போகின்றது என்பதையும் இந்த பட்டியையும், சாரணிய சின்னங்களை சூடுவதற்கு முன்னரும் நான் உணர்ந்துகொள்ளவில்லை. சாதாரணர்களைப்போல சாரணியம் என்பதும் ஒரு சேவை இயக்கமே என்ற எண்ணக்கருவிலேயே நானும் ஒரு சாரணன் ஆனேன்.

ஆனால் இந்த சாரணியம்தான் உள்மனதில் அடங்கிக்கிடந்த என் திறமைகளை, நான் மறுக்க மறுக்க இழுத்துக்கொண்டுவந்து மேடையேற்றிவிட்டது.
1990 பன்னிரெண்டுவயதிலே என்னை தன்னகத்தே இழுத்து பக்குவங்கள் பல சொல்லித்தந்தது மிக மிக பக்குவமாகவே.
எந்தநேரத்திலும் பிறருக்கு உதவும் மனோநிலை, சேவைக்கு தயாராகும் நிலை, என் பக்க எண்ணங்களை, பிறர்கோணத்திலும் யோசித்து பார்க்கும் பக்குவம், உன்னதமான தோழமை, எதிரிகளையும் நண்பர்களாக்கிவிடும் அன்பு, விட்டுக்கொடுப்பு, மற்றவன் உயர்விற்கு உதவி அவன்காணும் சந்தோசத்தால் அடையும் மிகப்பெரிய சந்தோசம், சசோதரத்துவம், தாழ்வு மனப்பான்மைகளை கழைதல், என பல.

மேடையை கண்டாலே நடுக்கமெடுக்கும் என்னை, முதல் முதல் ஏறி பேசவைத்தது சாரணியம் , பாட வைத்தது சாரணியம், நடிக்கவைத்து புகழ் வாங்கித்தந்தது அதே சாரணியம் .
சாரணர்களின் பொக்கிசம் “லொக் புக்” என்று அழைக்கப்படும் சாரணிய குறிப்பேடு. ஓவ்வொரு சாரணனும் அதை தன் காதலிபோல பேணிவைத்திருப்பான்.
ஆஹா… அப்படி ஒரு வாஞ்சையுடன் “லொக் புக்” எழுதி, அழகான சித்திரங்கள் ஒட்டி, போடடிபோட்டுக்கொண்டு அந்த "லொக்புக்கை" நிறப்பத்துடிப்போம்.
இப்போதும் நான் பொக்கிசமாக வைத்திருக்கும் பொருட்களில் அதுவும் ஒன்று.

ஓவ்வொரு துறையிலும் யாரோ ஒருவர் நமக்கு ரோல் மொடலாக இருப்பார். அப்படி எனக்கு சாரணயித்தில் ரோல் மொடலாக இருந்தது பேடன்பவல் அல்ல.
கிருஸ்ணகுமார் அண்ணா.
கிருஸ்ணகுமார் அண்ணாவின் சாரணியத்திற்கான அர்ப்பணிப்புக்கள் அப்போதுகளை என்னை பிரமிக்க வைத்தன. சாரணியம் சம்பந்தமான சகல விடயத்திலும் கிருஸ்ணகுமார் அண்ணா முன்னுக்கு நிற்பார். சாரணியம் என்பதைவிட, மாணவர் முதல்வராகவும், பிற களகங்கள், கல்லூரி நிகழ்வுகள் என அத்தனைக்கும், விருப்பத்துடன் சேவை எனக்கருதாமல், தன் கல்லூரிக்கான தன் அர்ப்பணிப்பு என இருப்பார் அவர். ஆனால் பரீட்சையில் அவரின் பெறுபேறு மேலும் அதிசயிக்க வைத்தது எங்களை. நான்கு பாடங்களிலும் “ஏ” தரச்சித்தி பெற்றிருந்தார் அண்ணா.
சிறந்ததொரு ரோல் மொடலாக, எங்களை செதுக்கிய ஒரு சிற்பியாக இப்போது ஒரு நன்றி மனத்தோடு கிருஸ்ணகுமார் அண்ணாவையும், சாரணியத்துவத்தையும் பார்கின்றேன்.(பதிவர் கன்கோனின் மூத்த தமையனார்தான் இந்த கிருஸ்ணகுமார் அண்ணா)

இன்றும் நினைவில் இருக்கின்றது முதன்முதலாக ஐந்துநாட்கள், சாரணர்பாசறை ஒன்றுக்காக வீட்டை பிரிக்கின்றேன். மனதிற்குள் முதல் அனுபவம் என்பதால் பெரும்கவலையும், பிரமிப்பான ஒரு பயமும் இருந்தது. ஆனால் இந்த ஐந்துநாட்களும் என் வாழ்க்கைமுறையை சீராக அமைப்பதற்கு ஒரு அத்திவாரம் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.
ஐந்தாவது நாள், வீடு திரும்ப கவலையுடன் இருந்தோம் என்பது அடுத்த கதை.

பேடன்பவல் எவ்வளவு ஒரு தீர்க்க தரிசி என்பதை பிரமிப்புடன் பார்க்கின்றேன். நாளைய எதிர்கால நட்சத்திரங்கள், இன்றைய சிறுவர்களே என்பதை உணர்ந்து, வெறும் தியறிகளாக இல்லாமல், செயற்பாட்டுடன், வாழ்வுக்கும், நாட்டிற்கும் ஏற்றவர்களாக ஒரு சமுதாயத்தை உருவாக்க எவ்வளவு உன்னதமான எண்ணத்துடன் இந்த அமைப்பை உருவாக்கிருப்பார்.
பேடன்பவல்!!! ஒரே வார்த்தை ஜீனியஸ்.

"என்னால் கூடுமானவரை
என் நாட்டிற்கும் என் சமயத்திற்கும்
என் கடமைகளை செய்வேன் என்றும்,
எக் காலத்திலும் பிறருக்கு உதவி புரிவேன் என்றும்,
சாரண விதிகளுக்கு அமைந்து பணிந்து நடப்பேன் என்றும்,
என் கௌரவத்தின் மீது சத்தியம் செய்கின்றேன்."

இதுவே ஒரு சாரணனாக சின்னம் சூட்டப்படும்போது நான் உட்பட அனைத்து சாரணர்களும் எடுத்துக்கொண்ட பிரமாணம். அதேபோல இன்றுவரை அந்தப்பிரமாணங்களுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தில்த்தான் இப்போதும் இருக்கின்றேன்.

13 comments:

ம.தி.சுதா said...

ஆமாம் அண்ணா சிறுவயதிலேயே ஒருவனுக்கு நல்ல வாழ்க்கை வழிகாட்டியாய் இருக்கும் ஒன்று இதுவாகும்...

கன்கொன் || Kangon said...

நான் படிக்கத் ஆரம்பித்த காலத்தில் அண்ணாமார் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டதால் அவர்களை பாடசாலையில் சாரணராகப் பார்த்ததில்லை, ஆனால் வீட்டில் நிறையப் படங்கள் பார்த்திருக்கிறேன். :-)

நானும் குருளைச் சாரணராக இருந்து பின்னர் ஏனோ பெரிதாக ஈடுபடவில்லை.
ஆனால் மகிழ்ச்சியான காலங்கள் அவை.


// "என்னால் கூடுமானவரை
என் நாட்டிற்கும் என் சமயத்திற்கும்
என் கடமைகளை செய்வேன் என்றும்,
எக் காலத்திலும் பிறருக்கு உதவி புரிவேன் என்றும்,
சாரண விதிகளுக்கு அமைந்து பணிந்து நடப்பேன் என்றும்,
என் கௌரவத்தின் மீது சத்தியம் செய்கின்றேன்." //

இப்போதும் இது ஞாபகமிருக்கிறது.

Unknown said...

//அதேபோல இன்றுவரை அந்தப்பிரமாணங்களுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தில்த்தான் இப்போதும் இருக்கின்றேன்//

தெரிந்தது எங்களுக்கும்!
சில நாட்களுக்கு முன் நீங்கள் சந்தித்த விபத்தின்போது!

Subankan said...

நானும் சிலகாலம் குருளைச்சாரணனாக இருந்திருக்கிறேன். சில காரணங்களுக்காகத் தொடரமுடியாமல் போய்விட்டது :(

pichaikaaran said...

நல்லதொரு பகிர்வு

யோ வொய்ஸ் (யோகா) said...

பள்ளி காலத்தில் நானும் ஒரு சாரணனே

ஷஹன்ஷா said...

அருமை அண்ணா.....நானும் சாரணர்களை அவதானித்துள்ளேன்.....உண்மையாக புதிய மனிதர்கள் தான்....


நான் பள்ளியில் சாரணியத்தில் இல்லாவிட்டாலும் சாரணிய நண்பர்களுடன் இருந்ததால் சாரணியம் பற்றி கொஞ்சமாவது கற்றுக்கொண்டேன்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சாரனர்களைப் பற்றிய அருமையான நினைவூட்டல்! ஒரு சாரணன் நல்லதொரு எதிர்காலப் பிரஜையாக வருவான் என்பதற்கு நீங்களும் ஒரு எடுத்துக்காட்டுத்தானே!

தர்ஷன் said...

சின்ன வயதில் குருளைச் சாரணனாக இருந்தாலும் பின் தொடர முடியாமற் போய் விட்டது. உங்கள் பதிவு அந்த நினைவுகளை மீட்டுத் தந்தது நன்றி

நிரூஜா said...

ம்...! எனது பள்ளிவாழ்கையில் எனக்கு கிடைக்கமல் போன ஒன்று. சின்னவ்வயதில் இருந்தே எனக்கு சாரணியனாக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் என்ட அப்பர் என்னை கடைசி வரைக்கும் சேர விடவில்லை. எவ்வளவோ அழுது குழறியிருப்பேன். எங்க கேட்டாதானே. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. முதல் முதல்ல எனக்கு பள்ளியில் சாரணராக வாய்ப்புகிடைத்த போது அப்பாவிடம் வந்து கேட்டேன். ஏனோ தெரியவில்லை அவர் மறுத்துவிட்டார். நீ சாரணர் இயக்கத்தில் சேரவேணும் எண்டா, ஆங்கில தினபோட்டி, தமிழ்தினப்போட்டி, பாடசாலை பாண்ட் குழு, கிறிகட் எதுக்குமே போகக்குட்டாது. அவர்கேட்ட விலையை அப்போது கொடுக்க முடியவில்லை. என்னுடன் படித்த பல நண்பர்கள் சாரணிய இயக்கத்தின் மூலம் ஜனாதிபதி விருது வாங்கிய போதெல்லாம் சற்றே வருத்தப்பட்டிருக்கின்றேன். :(

பூவரசு said...

அன்பின் தம்பிக்கு , உனது பதிவு என்னை பழைய நாட்களுக்கு கூட்டிச் சென்று விட்டது . எங்களது சாரணியக் காலம் மீண்டும் திரும்பி வரமாட்டாது . ஆனால் அந்த நினைவுகள் அனுபவங்கள் என்றும் நினைவில் நிற்கும்.
நட்புடன் கிருஷ்ணகுமார்

Bavan said...

சிறுவயதில் இதை தவறவிட்டுட்டமோ..:(

THOPPITHOPPI said...

"என்னால் கூடுமானவரை
என் நாட்டிற்கும் என் சமயத்திற்கும்
என் கடமைகளை செய்வேன் என்றும்,
எக் காலத்திலும் பிறருக்கு உதவி புரிவேன் என்றும்,
சாரண விதிகளுக்கு அமைந்து பணிந்து நடப்பேன் என்றும்,
என் கௌரவத்தின் மீது சத்தியம் செய்கின்றேன்."

LinkWithin

Related Posts with Thumbnails