Sunday, January 16, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.தர்ஷன்.

தர்ஷனால் “பதியவும் பகிரவும்” படும் விடயங்கள், மனதிற்குள் பல ஆச்சரியங்களை கொண்டுவருவதாக அமைந்துவிடுகின்றன. தர்ஷனின் எழுத்துக்கள்
சமூகத்தின் கண்ணாடியாக பலவேளைகளில் பிம்பங்களை காண்பித்து நிற்பதை அவதானிக்கமுடிகின்றது. எதையும் “பிரக்டிக்கலாக” எடுத்தியம்பும் முறை, சாத்தியப்பாடுகள், வேறுபட்டகோணங்கள் என மெதுவாக ஆராய்ந்து முடிவுகளை வாசகர்வசமே பல இடங்களில் விட்டுவிடுவது தர்ஷனின் காத்திரமான எழுத்துக்களின் பண்பு.
அரசியல், சமூகம், நாட்டு நடப்பு, கவிதை, இலக்கியம், விஞ்ஞானம், பௌத்தறிவு, விளையாட்டு, சமகாலம், உலகம், இசை, சினிமா, கலை என தர்ஷன் குறிவைக்கும் விடயங்கள் பல. ஆனால் வைக்கும்குறி தப்பாது இருக்கவேண்டும் என்பதில் தர்ஷன் மிகக்குறியாக இருப்பதை அவரது எழுத்துக்கள் நிரூபித்துவிடுகின்றன.

சிறிஸ்கந்தகுமார் தர்ஷன் என்ற இயற்பெயரைக்கொண்ட இவர் மாத்தளையை சொந்த இடமாகக்கொண்டவர். ஒரு விஞ்ஞான ஆசிரியர். ஆசிரியத்தொழிலை விரும்பி ஏற்று அந்த தொழிலின் மகத்துவம் உணர்ந்து அர்ப்பணிப்போடு செயல்பட்டு நாளைய சிறந்த சிற்பிகளை உருவாக்கும் பணியில் குறிக்கோளாக இருந்துவருபவர்.

தந்தைபெரியார் மேல் அளவுகடந்த பற்றும், அவரின் கருத்துக்களில் உறுதியும் உடையவர் தர்ஷன் என்பது, காத்திரமான பல விடயங்களை அவர் எழுதும்போது உள்ளே இழையோடும் பெரியாரிஸமும், அவரது தளத்தின் முகத்திலேயே இருக்கும் தந்தை பெரியாரின் உருவமும் நிரூபித்துவிடுகின்றன.
அடுத்து அதிசயிக்க வைப்பது, இலங்கையில் இருந்துகொண்டே உண்மையின் பக்கம் நின்று அரசியல் சுத்துமாத்துக்களை சுட்டிக்காட்டி அந்த எழுத்துக்களில், சாட்டைகளை சுழலவிட்டிருப்பது. எந்தவொரு முகஸ்துதிகளோ, அல்லது எந்தவொரு வசைபாடல்களோ தர்ஷனின் எழுத்துக்களில் அறவே கிடையாது.
உண்மைகள், யதார்த்தங்கள் எதுவோ அவற்றைத்தேடியே அந்த எழுத்துக்கள் கொண்டுசெல்லப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

அதேவேளை ஆரம்பத்தில் தர்ஷனிடமிருந்து வந்த காத்திரமான அரசியல், சமுகம் சார்ந்த விடயங்கள் தற்போது சற்று குறைந்துகாணப்படுவது, நாட்டின் சூழ்நிலை அல்லது அவரது வேலைப்பழுக்களாக இருக்கலாம்.
காத்திரமான பதிவுகள் மட்டும் இன்றி ஜனரஞ்சகத்தன்மையான பதிவுகள் எழுதுவதிலும் தர்ஷன் கில்லாடி.

சூப்பர்ஸ்ரார் ரஜினியின் பரம ரசிகனான தர்ஷன்.

"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே"

என்று எங்க அப்பா… ஐயம்பெருமாள் அறிவுடைநம்பி கலியப்பெருமாள் அவர்கள் சொல்லியிருக்கார் என்று தில்லுமுல்லு படத்தில் ரஜினி சொன்ன வசனத்தையே தன் தளத்திலும் பொக்கிசமாக வைத்திருக்கின்றார்.

இது கவிதையோ என்று தெரியாது!, டேய்..என்னையும் அனத்த விடுங்கடா!! என்று தொடராக கவிதை எழுதுவது தர்ஷனின் எழுத்துக்களின் மெனாரிஸம்.
ஆனால் வாசிததுப்பார்த்துவிட்டால் அவை கவிதையா என்ற சந்தேகங்களையும், அனத்தங்கள் இல்லை என்ற உண்மைகளும் புரிந்துவிடும். சில இடங்களில் அப்படியொரு வேண்டாத தன்னடக்கம் தர்ஷனுக்கு!

தர்ஷனிடம் இருக்கும் இன்னும் ஒரு பெரிய ஆச்சரியம் தர்ஷனின் அபரிவிதமான தேடல்கள்தான். சமகாலத்தில் என்ன விடயம் நடந்தாலும், அல்லது பேசப்பட்டாலும் அது சம்பந்தமான தகவல்களை விரல் நுனிகளில் வைத்திருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடுவார் மனிதர்.
அடுத்த ஒரு பெரிய ஆச்சரியம் பல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வாசித்துக்கொண்டிருக்கும் தர்ஷனின் எழுத்துக்களில் எந்தவொரு எழுத்தாளரின் எழுத்துத்தாக்கமும் இல்லாமல் தனக்கான எழுத்துக்களுடன் உலாவருவதுதான்.

பதிவுலகில் தர்ஷன், பல பதிவர்களின் பதிவுகளையும் தேடிப்போய் வாசித்து, கருத்துக்களை பகிர்ந்துகொள்பவர். பெரும்பாலான பதிவர்களின் தின விருந்தாளியாக இருப்பவர். நட்புடன் கௌரவத்தைப்பேணிக்கொள்பவர்.
ஒரு ஆசிரியராக இருப்பது எவ்வளவு உன்னதம் என்பதைவிட, அது எவ்வளவு சிரமமான பணியும்கூட, அப்படி இருந்தும் பதிவெழுதுவதை தொடர்ந்து ஆச்சரியம் கொள்ளச்செய்பவர்.

சரி இந்தவாரப்பதிவரான தர்ஷனிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளும் அதற்கான அவரது பதிலையும் பார்ப்போம்.

கேள்வி :வலைப்பூ எழுத வேண்டும் என்ற ஆர்வம்எப்படி ஏற்பட்டது?

தர்ஷன்: வாசிப்பும் எழுத்தும் எனக்கு சிறுவயதில்இருந்தே பிடித்த விடயங்கள்.அம்புலிமாமா,கோகுலம்,பாலமித்ரா,காமிக்ஸ்கள் என சின்ன வயதில் ஆரம்பித்தஎன் வாசிப்பார்வம் தொடர்ந்துசுஜாதா,ராஜேஷ்குமார்,சுபா,பட்டுக்கோட்டைபிரபாகர்,சாண்டில்யன் என வளர்ந்தது.இதைத்தான் என்றில்லாமல்எதுவென்றாலும் சின்ன வயதிலிருந்தேவாசிப்பேன். அத்தோடு பாடசாலையில்தமிழ்மொழித்தினம் உள்ளிட்ட போட்டிகளின்போது பேச்சு,கட்டுரை,விவாதம் போன்ற பலபோட்டிகளிலும் பங்கேற்க வேண்டிதிருக்குறள்,பாரதியார் கவிதைகள் எனபலதையும் மனனம் செய்ய வேண்டிஇருந்ததனால் என் சிறுவயதிலேயே ஓரளவுநல்ல வாசிப்பு இருந்தது. பின் கல்லூரிக்காலங்களில் முற்போக்கு எழுத்துகளிலும்நவீன இலக்கியங்களிலும் ஆர்வம் வந்துவாசித்தேன். இவ்வாறு நான் பெற்றவாசிப்பனுபவம் தந்த தூண்டுதலே என்வலைப்பதிவு. வாத்தியாரின் கற்றதும்பெற்றதும் இலங்கையின் பத்திரிகையில்வெளிவந்த கே.எஸ். சிவகுமாரன்,இளையஅப்துல்லா போன்றோரின் பத்திஎழுத்துக்களில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆகஅப்பத்தி எழுத்துக்களை நாமும் முயன்றுப்பார்க்கக் கூடிய களமான வலைப்பூக்கள்பற்றி அறிந்து பின் எனக்கென ஒரு வலைப்பூஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில் இங்கு என்னை நிறையஊக்குவித்த பதிவர் கலை ராகலை(ஏனோஇப்போது எழுதுவதில்லை). எனதுவலையுலக பயணம் பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்ற போதும்அவ்வப்போது எழுதுவதில் ஒரு திருப்தி.


கேள்வி :உங்களுக்கு எழுத்தார்வத்தைஏற்படுத்தியவர்கள் யார்?

தர்ஷன்: அம்மம்மா, அம்மா, சித்தி என வீட்டில்எல்லோரும் ஆசிரியர்கள் என்பதால்அவர்களும் எப்போதும் எதையேனும் படிஎனப் புத்தகங்களையே வாங்கித்தந்திருக்கின்றனர். அதிலும்தமிழாசிரியையான எனது சித்திகொஞ்சமேனும் நான் நல்ல தமிழில் எழுதமுக்கிய காரணம். பாடசாலையிலும் தரம்ஏழிலிருந்து சாதாரணதரம் வரைஅவர்களிடமே கற்றேன். அத்தோடுபாடசாலை வாழ்வில் என் உற்ற நண்பன் சஜிஎனக்கு எழுத்தார்வம் வர இன்னுமொருமுக்கியக் காரணம்.

கேள்வி :நீங்கள் எழுதும் பதிவுகள் பற்றி?

தர்ஷன்:சினிமா,அரசியல், மற்றும் கண்ணில் பட்டவிடயங்களைப் பற்றி ஏதோ நாலு வரியில்சுவாரசியமாய் எழுதி விட்டு செல்வதையேசெய்துக் கொண்டிருக்கிறேன். சின்னதாய்நாலு வரியில் ஏதேனும் அலங்காரமானவார்த்தையை கிறுக்கி விட்டு அதை என்ட்டர்தட்டி type பண்ணி விட்டு கவிதை என்றுசொல்வதுமுண்டு. எதிர்காலத்தில் ஏதேனும்காத்திரமாக எழுதும் ஆர்வம் உண்டு.முயல்கிறேன்.

தர்ஷனின் வலைத்தளம் - ஸ்ரீ தர்ஷன் "பதியவும் பகிரவும்"

12 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

ம.தி.சுதா said...

குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்னர் தான் எனக்கு இவரது அறிமுகம் கிடைத்தாலும் இவரது கவிகள் என்னைக் கட்டிப் போட்டது. உண்மையிலேயே இவர் ஒரு காதல் உணர்வில் எழுதுவது போலவே இருக்கும் அப்படி உயிரோட்டமானவை.. அத்துடன் இவரது கருத்துக்களாலும் எனை கவர்ந்தவர்..
தாங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தர்சன்..

வந்தியத்தேவன் said...

நல்லதொரு நண்பர். இவர் பெரிய மன்னிக்கவும் அதிதீவிர ரஜனி ரசிகர் என்பதை அடிக்கடி இவரின் நண்பர் சஜி கூறுகின்றவர். தர்ஷன் குறிப்பிட்ட கலை(ராகலை)ஆரம்பகால வலைப்பதிவர் அவரின் ஓய்வு எனக்கும் கவலைதான். (ஆளைக் கண்டால் விசாரித்ததாக சொல்லவும்).

பெரும்பாலான வலைப்பதிவர்கள் சுஜாதாவின் விசிறிகளாக இருப்பதில் ஆச்சரியவில்லை,

வாழ்த்துக்கள் தர்ஷன், வாழ்த்துக்கள் ஜனா.

டிலான் said...

வணக்கங்கள் தர்ஷன் மாஸ்ரர்

சக்தி கல்வி மையம் said...

கருத்துக்களால் எனை கவர்ந்தவர்..
வாழ்த்துக்கள் தர்சன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

தர்ஷனின் ஆல்ரவுண்ட் திறமை கண்டு வியந்திருக்கிறேன்..

வாழ்த்துக்கள் தர்ஷன்

Unknown said...

இந்த வாரப் பதிவர் தர்ஷன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஷஹன்ஷா said...

இப்புதியவனுக்கு இவரின் அறிமுகம் கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி....


நன்றி அறிமுகத்திற்கு...

pichaikaaran said...

எனக்கு மிகவும் பிடித்த இவர்...

அவரை நேரில் சந்தித்து பேசிய உணர்வை தந்ததற்கு நன்றி...

தர்ஷன் said...

மேலே வாழ்த்துரைத்த அனைவருக்கும் அடியேனின் நன்றிகள்

வந்தியண்ணா சஜி சொல்லாமல் விட்டிருக்க கூடும். அவனும் ரஜினி ரசிகன்தான் அந்நாளில். Mrs சஜி கோபிக்க மாட்டார்கள் என நம்புகிறேன். நானும் சஜியும் நண்பர்கள் என்பதையும் விட காதலர்கள் போல.

//நாட்டின் சூழ்நிலை அல்லது அவரது வேலைப்பழுக்களாக இருக்கலாம்.//

இரண்டுமே
நன்றி ஜனா அண்ணா குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டிக் கொண்டிருந்தவனை நாலு பேருக்கு அடையாளம் காட்டி இருக்கீங்க. நீங்கள் மேலே சொன்ன மித மிஞ்சிய பாராட்டுரைகளால் தங்களுக்கு பொறியோ போஜனமோ கிடைக்காமல் போய் விடுமோ எனத்தான் பயமாய் இருக்கிறது. நன்றி

Bavan said...

தர்ஷன் எனக்குப் பிடித்த பதிவர்களில் ஒருவர்..:D

ஆனாலும் இவருடன் Facebookகில் பலவிடயங்களில் மொக்கை போட்டிருக்கிறேன்..:P

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பல விடயங்கள் எனக்குத் தெரியாது..:)

ஜனா அண்ணா நீங்கள் ஸ்பை சி.பி.ஐ ஏதாவது வச்சு விசயம் கலக்ட் பண்ணுறீங்களோ..:P #டவுட்டு

அறிமுகத்துக்கு நன்றி..:D

anuthinan said...

அறிமுகமான பதிவர்தான் தர்சன் அண்ணா!!!

ஆனாலும், பவனுக்கு எப்படி அறிமுகமோ அதே போலதான் எனக்கும் அறிமுகம்!!

அன்னவை பற்றிய தகவல்களை தந்த ஜனா அண்ணாவுக்கு நன்றிகள்

LinkWithin

Related Posts with Thumbnails