Monday, January 17, 2011

ஆயிரத்தில் அல்ல கோடிகளில் ஒருவர்.

ஒரு இலங்கைத்தமிழனது பார்வையில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர், தலைவனுக்குத்தலைவன், இதய தெய்வம் என்ற நிலையில் என்றும் மிகப்பெரிய கௌரவத்துடனும், நன்றியுடனும் பார்க்கப்படும் ஒருவர்.
எந்தவொரு கலைஞனுக்கும் அடிமைப்பட்டுவிடாத இலங்கைத்தமிழன், எம்.ஜி.ஆர் என்ற நாமத்திற்கு மட்டும் கொண்டாட்டம் எடுத்தகாலங்கள் ஆச்சரியமானது.
அதுபோல உலகத்தலைவர் எவருக்கும் சிலைவைத்து வழிபடாத சமுகம், எம்.ஜி.ஆர் என்ற அந்த தலைவனுக்குமட்டும் சிலையெழுப்பி தலைகுனிந்து இன்றும் வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஏனெனின் இலங்கைத்தமிழனின் இன உணர்வுக்கும், விடியல் என்ற பயணத்திற்குமான “ஆணிவேர்” எம்.ஜி.ஆர் என்ற அந்த அன்பு மனிதனே என்பதில் இன்றுவரை அந்த சமுகம் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நெஞ்சில் வைத்து துதித்துகொண்டிருக்கின்றது.

மருதூர் கோபாலமேனன் இராமச்சிந்திரன் இதேநாள் 1917 ஆம் ஆண்டு இலங்கையில் நாவலப்பிட்டி என்னும் இடத்தில் பிறந்து டிசெம்பர் 24 1987ஆம் ஆண்டு உடலால் மறைந்தாலும் இன்றுவரை கோடிக்கணக்கான உள்ளங்களில் என்றுமே ஒரு சக்கரவர்த்தியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
எம்.ஜி.ஆர் உடைய திரையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என்பவற்றை சொல்லப்போனால் அது சூரியனுக்கே கண்ணாடி பிடித்து காட்டுவதுபோலாகிவிடும்.
எனவே என்பார்வையிலும், என் அனுபவங்களிலும் எம்.ஜி.ஆர் என்ற கோணத்தில் போகின்றேன்.

1987 ஆம் ஆண்டுகளின் முன்பகுதி பாரிய அனர்த்தங்கள் ஆபத்துக்கள், குண்டுவீச்சுக்கள், ஷெல் வீச்சுக்களுக்கு மத்தியில் நாளை எங்கள் உயிர் ஒட்டுமொத்தமாக பறிக்கப்பட்டுவிடும் என்ற பீதியுடன் நாம் வாழ்ந்துவந்தாலும், எம்.ஜி.ஆர் இருக்கின்றார் என்ற தைரியம் எம் சுற்றத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சுக்களிலும், போராளிகளின் நம்பிக்கைகளிலும் தெளிவாகத்தெரிந்தமையினை அப்போது 09 வயதுதான் என்றாலும் தெளிவாகப்புரிந்துகொண்டேன்.
உணவுக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் உணவுகளுடன் வந்த இந்தியக்கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்படையினால் எச்சரிக்கப்பட்டு, திரும்பி அனுப்பட்டதும், ஆனால் உடனயடியாகவே பிற நாடு ஒன்றின் வான்பரப்பு என்றாலும் வாடுவது தமிழ் இனம் என்ற எம்.ஜி.ஆரின் அசைக்கமுடியாத பிடிமானத்தால் இந்திய மிராஜ் விமானங்கள் இலங்கைக்கு மேலாக சுற்றிவந்து உணவுப்பொருட்களை கொட்டிவிட்டு சென்றதும்,
அப்போது எங்களுக்கு வானில் இருந்து அருள் புரிந்தது மிராஜ்களாக தெரியவில்லை எம்.ஜி.ஆராகவே தெரிந்தார்.

ஆனால் சில சூழ்ச்சிகளால், இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில், ஈழத்தமிழர்களின் தாயகங்களில் சிங்களவனையும் மீறிய ஊழித்தாண்டவங்கள் இடம்பெற்றபோது, நோய்ப்படுக்கையில் படுத்திருந்தாலும் அவர்களுக்காக ஏங்கிய ஒரே உன்னதமான ஜீவன் எம்.ஜி.ஆர் மட்டுமே.
இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில் நாம் இருக்கும்வேளைகளில், இந்திய அமைதிகாக்கும் படைகள், ட்ராக்குலாக்களாக எங்கள் இரத்தங்களை வெறிகொண்டு குடித்துவந்த நிலையில், எம்.ஜி.ஆரின் இழப்பு எங்களின் இழப்பாகவே எங்களுக்கும்தோன்றியது.

ஐயோ… எங்களைக்காப்பாற்ற இனி எவரும் எம் இனத்தில் இல்லை என்ற அன்றைய நாட்களின் அந்த மக்களின் அவலக்குரல் இறுதிமட்டும் தீர்க்கதரிசனமாகவே போய்விட்டது.
எம்.ஜி.ஆரின் எங்கள் மீதான் கரிசனை வெறும் வார்த்தைகளாக இருக்கவில்லை, அரசியல் இலாபங்களாக இருக்கவில்லை, அதற்கான தேவைகளும் உச்சத்தில் இருந்த அவருக்கு இருக்கவில்லை. காசுக்காகவோ, தன் காரியங்களுக்காகவோ அது இருக்கவில்லை. உண்மையான உணர்வு, பாசம், நேசிப்புக்களுக்காகவே அது இருந்தது. அந்த நேசம், பாசம் அவர் மறையும் வரை அவரிடம் உச்சமாக இருந்தது.
நிச்சயம் எம் மீதான ஒரு பெரும் ஏக்கத்துடனனேயே அந்த ஜீவன் பிரிந்திருக்கும் என்பது ஈழத்தமிழரின் அசைக்கமுடியாத உண்மை.

சென்னை சென்ற முதலாவது நாள்.. முதல்வேலையாக மரினாபீச்சுக்கு சென்று அங்கே..இங்கே பார்க்காமல் நேராகச்சென்றேன் எம்.ஜி.ஆரின் புகழுடல் “ஈழத்தமிழன் விடிவு பற்றிய நல்லசெய்தி தன் கல்லறையின் காதுகளில் விழாதா” என்ற ஏக்கத்துடன் இருக்கும் இடத்திற்கு.
தூரத்தில் “எம்.சி.ஆரின் வாச்சு சத்தம் கேக்குதுப்பா.. என்று சிலர் கல்லறையில் காதுகளை வைத்து கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் வேடிக்கையாக திறப்புக்களால் தட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் அகலும்வரை காத்திருந்துவிட்டு அந்த இடத்திற்கு செல்கின்றேன். கண்கள் கலங்குகின்றன, இருதயத்தில் ஒரு பரிதவிப்பு, இதோ கோடி இயதங்களில் வாழும் ஒருவரின், எங்கள் நெஞ்சங்களில் என்றும் வாழும் ஒரு உன்னதமானவரின் உறங்கும் இடத்திற்கு செல்கின்றேன் என்ற பதபதப்பு. அமைதியாக கைகளை கட்டி நானும் என்னுடன் வந்த நண்பர்களும் நிற்கின்றோம். எனக்கு கண் குழமாகிவிட்டது. நண்பர்களை பார்த்தேன் அதில் ஒருவர் அழுதே விட்டார். “காற்று நம்மை அடிமை என்று சொல்லவில்லையே” என்று தொடர்ந்து அந்த பாடல் வரிகள் மனதிற்குள் கேட்டுக்கொண்டிருந்தன.

பக்கத்தில் கடமையில் இருந்த காவல்அதிகாரி தம்பி நீங்கள் சிலோனுங்களா? என்று கேட்டார். ஓம்.. என்றோம். ஏதோ சொல்லவந்தவர், கல்லறையினையும் எங்களையும் பார்த்து தொண்டைவரை வந்த வசனங்களை கஸ்டப்பட்டு விழுங்கிவிட்டு, எங்களை தட்டிக்கொடுத்துவிட்டு அப்பால் சென்றார்.
தமிழ்நாட்டில் எம் இனத்தின் எம்மீதான் அன்றைய நிலையாக அவரது செய்கை சிம்போலிக்காக இருந்தது நமக்கு.

இதோ இப்போது திக்குத்தெரியாத காட்டில் என்ன செய்வதென்று தெரியாது தவிப்புடன் இப்போது எம்மினம் அடிபட்டு நிற்கின்றது. அப்போது திக்கற்றுநின்ற நமக்கு இதுதான் கிழக்கு என்று தெளிவாகக்காட்டிய அந்த எம்.ஜி.ஆரின் பாசக்கரங்கள். இப்போது மீண்டும் திக்கற்ற சமுதாயமாக இருக்கும் நமக்கு ஒரு ஆன்மபலமாக நின்று வழிகாட்டும் என்ற நம்பிக்கையுடன்….இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

14 comments:

டிலான் said...

எம்.ஜி.ஆர் எம் பாதையின் வெளிச்சம், ஆணிவேர். யாரும் மறுக்கமுடியாத உண்மை அண்ணர். இலங்கையில் தமிழ் இனம் வாழும்வரை அவர்கள் இதங்களில் எம்.ஜி.ஆரும் நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருப்பார்.

Unknown said...

இதோ இப்போது திக்குத்தெரியாத காட்டில் என்ன செய்வதென்று தெரியாது தவிப்புடன் இப்போது எம்மினம் அடிபட்டு நிற்கின்றது. அப்போது திக்கற்றுநின்ற நமக்கு இதுதான் கிழக்கு என்று தெளிவாகக்காட்டிய அந்த எம்.ஜி.ஆரின் பாசக்கரங்கள். இப்போது மீண்டும் திக்கற்ற சமுதாயமாக இருக்கும் நமக்கு ஒரு ஆன்மபலமாக நின்று வழிகாட்டும் என்ற நம்பிக்கையுடன்….இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்

சத்தியமான உண்மை நண்பரே.

தமிழ் உதயம் said...

நிச்சயம் எம் மீதான ஒரு பெரும் ஏக்கத்துடனனேயே அந்த ஜீவன் பிரிந்திருக்கும் என்பது ஈழத்தமிழரின் அசைக்கமுடியாத உண்மை.///

உண்மை.வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனத்தில் நின்றவர் யார், நிறைந்தவர் யார். அவர் தான் புரட்சிதலைவர்.

THOPPITHOPPI said...

//ஆயிரத்தில் அல்ல கோடிகளில் ஒருவர்//

மறுக்க முடியாதது

KANA VARO said...

எம்.ஜி.ஆரை திரைப்படங்களில் மட்டும் பார்த்து பழகியதால், ஏதோ ஒரு அவதார புருஷர் மாதிரியே எனக்கு படுகிறது.

சிவாஜி காலத்தில் வாழ்ந்திருக்கிறோம் எண்ட பெருமை கிடைத்தாலும் எம்.ஜி.ஆர் காலத்தில் வாழாதது வருத்தமே!

அடுத்த எம்.ஜி.ஆர் நாற்காலி வெறுமையாகவே இருக்கிறது அது ஏன்?

pichaikaaran said...

true

ஷஹன்ஷா said...

மூன்றெழுத்து தாரக மந்திரம் MGR..!


திரைப்படங்களில் பார்க்க கிடைத்த மகிழ்ச்சிதான் எனக்கும்..
என் சிறுவயது Favorite படங்கள் என்றால் அவை MGR& சிவாஜி படங்கள் தான்...இன்றும் பசுமை...

ம.தி.சுதா said...

அண்ணா மிக மிகச் சரியான தலைப்பு.. தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு உதாரணபுருசன்..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ம்........ எம் ஜி ஆர் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா

? என்று பலர் பேசிக்கொள்வதை நானும் கேட்டிருக்கிறேன்! உண்மைதான்!!

நிஷா said...

100 person True.
He is the Big Light for our Dark Yaathra...

தர்ஷன் said...

எம்ஜியாரில் ஆரம்பத்திலிருந்தே பெரிய அபிப்பிராயம் எல்லாம் எனக்கு கிடையாது. டொக்டர். அன்டன் பாலசிங்கம் எழுதிய "விடுதலை" வாசித்த பிறகுதான் முதல்வர் எம்ஜியாரைப் பிடித்தது. நடிகர் எம்ஜியாரை இன்றைக்கும் எனக்கு கண்ணாலே காட்டாது. சின்ன வயதில் ஒரு முறை அப்பா ஒளிவிளக்கு என நினைக்கிறேன் ஆரம்பத்தில் எம்ஜியார் கட்டிடமொன்றில் ஏறும் காட்சி இருக்கும். அதைக்காட்டி எம்ஜியாரை ஒரு பெரிய சாகசக்காரனாக முன்னிறுத்தி என்னையும் அம்ஜியாரின் ரசிகனாக்க முயன்றார். ஆனால் எனக்கு அப்போதே எம்ஜியார் படம் பார்ப்பது இப்போது விஜயகாந்த் படம் பார்ப்பது போலத்தான் இருந்தது

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ( INTERNATIONAL MOVEMENT FOR TAMIL CULTURE ) said...

எம்ஜியார் ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர். எந்த கோடியில் ஒருவர் என்கிறீர்கள். உண்மையாக தமிழனாய் வாழ்ந்தவர். தமிழீழம் வேண்டும் ஒவ்வொருவரும் காலம் முழுதும் வணங்க வேண்டும். எல்லாவற்றையும் விட வெளிப்படையாக ஈழ வேங்கைகளை காவலராக அறிவித்தவர். ஈழத்தமிழர்களைப் பொருத்த வரை தனிச்சிறப்பு வாய்ந்தவர். யாருக்கும் இணையானவ்ரில்லை

அஹோரி said...

நல்ல பதிவு.

Anonymous said...

"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாசு குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் " mgr க்கு ஆகவே எழுதப்பட்டது போல
அருமையான பகிர்வு அண்ணா

LinkWithin

Related Posts with Thumbnails