Wednesday, January 19, 2011

வட்டங்களுக்குள் நம் வாழ்க்கை கட்டுமானங்கள்.






கட்டுமானங்கள், திட்டங்கள், யாப்பமைப்புக்கள் என்பன பெரிய நிறுவனங்களுக்கோ, அல்லது நாடுகளின் கட்டமைப்புகளுக்கோ மட்டும் இன்றி நமது வாழ்க்கையிலும் தனி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கட்டுமானம் உண்டு.
அதை தெரிந்துகொண்டோ அல்லது தெரியாமலோ நாம் அந்த கட்டுமானங்களுக்குள்ளாகவே எமது வாழ்க்கையினையும் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.
இந்த கட்டுமானங்களை எமக்கே தெரியாமல் எம் கட்புலனுக்கு அப்பாற்பட்ட எம்மைச்சுற்றி நாமே போட்டுக்கொண்டு வாழும் வட்டங்களின்மூலம் ஓரளவுக்கு தெளிவு படுத்திவிடலாம். எம்மைச்சுற்றி குறைந்தது மூன்று வட்டங்களையாவது நாம் போட்டிருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மிகப்பெரிய விடயம் ஒன்றை ஒரு பதிவில், சுருங்கச்சொல்வது என்பது இயலாதகாரியம் என்றாலும், அந்த பெரிய விடயத்தை சிறியதாக ஓரளவுக்காவது புரியும் வண்ணம் சொல்லநினைக்கின்றேன்.

நான்..என்ற இடத்தில் இருந்து எமக்காக நாம் போட்டுக்கொண்ட வட்டங்கள் ஆரம்பமாகின்றன.
இதில் முதலாவது வட்டமாக மனைவி, குழந்தைகளோ, பெண்கள் என்றால் கணவன் குழந்தைகளோ என்று வருகின்றது. இதுவே ஒருவனின் அல்லது ஒருத்தியின் மூலாதாரவட்டமாக அமைந்துவிடுகின்றது. (சில சமையங்களில் இந்த வட்டமே சிதைந்து ஏனையவட்டங்களில் தாக்கம் செலுத்தும் சந்தர்ப்பங்களும் உண்டு அதற்கு பின்னர் வருவோம்.)

இரண்டாவது வட்டம். கணவனின் பெற்றோர்கள், சகோதரர்கள், அதேபோல மனைவியின் பெற்றோர்கள் சகோதரர்கள் என்போர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மூன்றாவது வட்டத்தினுள் ஏனைய உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் உள்ளடக்கட்டிருக்கின்றனர்.

நான்காவது வட்டத்தினுள், கூடத்தொழில் புரிபவர்கள், அன்றாடம் பழகிக்கொள்பவர்கள், வாடிக்கை வைத்திருக்கும் கடைக்காரர்கள் இன்ன பிற நபர்களை கூறிக்கொள்ளலாம்.

இவற்றை தாண்டி ஐந்தாவது வட்டம், செல்வாக்கு, உச்ச பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், சமுக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள், மத குருக்கள் என்போரை கொள்ளலாம்.

சரி… வாசித்துவிட்டீர்கள் அல்லவா? ஒருமுறை கண்களைமூடி…உங்கள் உறவுகள் நண்பர்களை, உங்களுக்கு தெரிந்த எழுமாறான நபர்களை நினைத்துப்பாருங்கள்.
உங்களுக்கும் உங்கள் வட்டங்கள் தெரிந்து, நீங்கள் நினைத்த நபர் எந்தவட்டமோ அந்த வட்டத்தினுள் நிற்பதை உணரமுடிகின்றதா?
அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்.

எமக்கு உரிய, அறிமுகமான நபர்களை நாம் அன்றாடம் எந்த எந்த வட்டங்களில் போடவேண்டுமோ அந்த அந்த வட்டங்களில் போட்டுக்கொண்டே இருக்கின்றோம்.
உதாரணமாக மூன்றாவது வட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவரையோ, அல்லது அயலவர் ஒருவரையோ அவரது எம்சார்ந்த இயல்புகள், ஈர்ப்புக்கள், உச்ச அன்பு காரணமாக இரண்டாவது நிலைக்கு அவரை உற்ற உறவினர், சகோதரர்களின் நிலைக்கான இரண்டாம் வட்டத்திற்கு உள்ளீர்த்து வைத்துவிடுவதும் உண்டு.
அதேபோல பல்வேறு காரணங்களுக்காக இந்த வட்டத்தில், முன்னகர்வு, பின்னகர்வுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்.
ஆனால் இரண்டாவது வட்டம் கட்டாயமானது, அந்த வட்டத்தை அழித்துவிடவோ, அல்லது சிதைக்கவோ நம்மால் முடியாது. ஏனெனில் அது பிறப்பால் அமைந்தது.

முதலாவது வட்டமே சிதைவுறும் நிலை விவாகரத்துக்களில் உண்டு. விவாகரத்துக்கள் மூலாதார வட்டத்தையே சிதைவுக்கு உள்ளாக்கிவிடுகின்றன. இதன் தாக்கம் பிறவிட்டங்களிலும் பிரதிபலிப்பை காட்டும்.
இரண்டாவது வட்ட உறவிர்களில் சரிபாதி எதிரிகளாகும் சந்தர்ப்பங்களும், ஏனைய உறவினர்கள், நண்பர்கள், இந்த நிலையில் மூலாதார வட்டத்திற்குள் வரவேண்டிய தேவைகளும் இதன்போது ஏற்பட்டு ஒரு குழப்பமான நிகழ்வே அரங்கேறிவிடுவது இயல்பு.

அடுத்து மூன்றாவது வட்டம் அந்த வட்டத்தின் தனிநபரான ஒருவனின் உணர்வுகள், அபிலாசைகளை தீர்த்துக்கொள்ள மிகவும் தேவையான விடயம். ஏனெனில் இந்த வட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் நண்பர்கள். யாரிடமும் சொல்லமுடியாத, மனக்கஸ்டங்களையும், பிரச்சினைகளையும் இரண்டு வட்டங்களைத்தாண்டி இந்த மூன்றாவது வட்டத்தினரிடமே சொல்லக்கூடியதாக இருக்கும். இந்த ஐந்து வட்டங்களிலும் இது சென்ஸிட்டிவ்வான வட்டம் என்று சொல்லலாம்.
ஏனைய வட்டங்களைவிட இந்த வட்டத்தினரிடமே ஒருவனுக்கு ஆறுதலும், அமைதியும் கிடைக்கும். எனவே இந்த வட்டத்தினுள் நிதானமாகவே ஆராய்ந்து நபர்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

அடுத்த நான்காவது வட்டம் நாம் அன்றாடம் பழகிக்கொள்ளும் வட்டம். இந்த வட்டத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது என்றாலும் உடனடியான உதவிகளுக்கும், அதேவேளை திடீர் என ஏற்படும் ஆபத்திற்கும் முன்னுக்கு நிற்கப்போகும் வட்டம் இதுவாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வட்டத்தில் உள்ளவர்களைத்தான் நாம் தினம் தினம் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம். மறைமுகமாக எம்மீது செல்வாக்கு செலுத்துபவர்கள் இவர்கள் என்று சொல்லிக்கொள்ளமுடியும்.

இறுதிவட்டம், ஐந்தாவது வட்டம் சிலருக்குத்தான் உண்டு. தொழில் நிமித்தம், நண்பர்கள் நிமித்தம், கலை நிமித்தம் கட்டாயமாக ஏற்பட்டுவிடும் வட்டம் இது.
குறிப்பாக இந்த வட்டம் பற்றி ஏனைய வட்டத்தினருக்கே தெரியாதபடி நாம் இந்த வட்டத்தை இரகசியமாக எம்முடன் வைத்திருப்போம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பேச்சிலேயே சில வேலைகள் முடிவடையவும் இந்த வட்டமே பெரிதும் உதவும். எம்மால் முடியாத, எம்மைமீறிய ஒரு காரியத்திற்கு இந்த வட்டம் உதவலாம்.

ஆனால் உண்மையான அன்பு, நேசம், கபடமற்ற, கயமையற்ற நட்புக்கள், அன்பு உள்ளங்கள், இந்த வட்டங்கள் அத்தனையினையும் தாண்டி முதல் வட்டத்திற்கு மிக அருகில் வந்து நின்றுவிடுவதும் உண்டு. அதேபோல கடும் விரோதங்களால் எந்தவொரு வட்டத்தில் உள்ளவர்களும், அனைத்து வட்டங்களிலும் இருந்து நகர்த்தப்படாமல் ஒரே அடியாக அழித்துவிடப்படுவதும் உண்டு.
ஏன் என்றால் அனைத்துமே மனித மனம் அல்லவா?
சரி..இப்போது சொல்லுங்கள் உங்களைச்சுற்றி நீங்கள் போட்டிருக்கும் வட்டங்கள் எத்தனை?

17 comments:

ராம்ஜி_யாஹூ said...

oh ok

Vathees Varunan said...

நல்ல ஒரு பதிவு....

என்னைச்சுற்றி அனைத்து வட்டங்களையும் வைத்திருக்கிறேன்

தமிழ் உதயம் said...

இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய கட்டங்களே.

தர்ஷன் said...

இனிதான் ஆறுதலாக வட்டங்களை போட்டு அதற்குள் ஆட்களை போட வேண்டும்

சக்தி கல்வி மையம் said...

நான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன்-நிருபித்து விட்டீர்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/2010-2011.html

Bavan said...

//அதேபோல பல்வேறு காரணங்களுக்காக இந்த வட்டத்தில், முன்னகர்வு, பின்னகர்வுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்.//

ம்ம்ம்.. படித்த பின்னர் யோசித்துப்பார்த்தால் விளங்குகிறது, உணர்ந்தும் இருக்கிறேன்..:)

நல்ல பதிவு, நன்றி அண்ணா..:D

Chitra said...

ஆனால் உண்மையான அன்பு, நேசம், கபடமற்ற, கயமையற்ற நட்புக்கள், அன்பு உள்ளங்கள், இந்த வட்டங்கள் அத்தனையினையும் தாண்டி முதல் வட்டத்திற்கு மிக அருகில் வந்து நின்றுவிடுவதும் உண்டு. அதேபோல கடும் விரோதங்களால் எந்தவொரு வட்டத்தில் உள்ளவர்களும், அனைத்து வட்டங்களிலும் இருந்து நகர்த்தப்படாமல் ஒரே அடியாக அழித்துவிடப்படுவதும் உண்டு.
ஏன் என்றால் அனைத்துமே மனித மனம் அல்லவா?


.....ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க.... சிந்திக்கவும் வைக்கிறீங்க.

pichaikaaran said...

சிந்திக்க வைக்கும் பதிவு . நேரில் வாருங்கள் . நிறைய பேச வேண்டும்

Subankan said...

இந்த வட்டங்கள், எல்லைகள் எல்லாவற்றையும்விட நெருக்கமானவர்கள் மையத்தின் அருகிலும் மற்றவர்கள் சற்று விலகியும் இருப்பதுதானே (இயற்கையிலும்) இயல்பு? முதலாவது வட்டமே சிதைவுறும் நிலை என்றால் அது எப்படி முதலாவது வட்டமாகிறது?

அந்த அடிப்படையில் இறுதி வரிகளோடு ஒத்துப்போகிறேன் :)

Unknown said...

//ஆனால் உண்மையான அன்பு, நேசம், கபடமற்ற, கயமையற்ற நட்புக்கள், அன்பு உள்ளங்கள், இந்த வட்டங்கள் அத்தனையினையும் தாண்டி முதல் வட்டத்திற்கு மிக அருகில் வந்து நின்றுவிடுவதும் உண்டு//

உண்மை உண்மை..

எனது முதல் வட்டத்திற்குள் நெருங்கிய நண்பர்கள்!
திருமணத்திற்கு முன்னர் முதல் வட்டத்திற்குள் நண்பர்கள் இருப்பார்களென நான் நினைக்கிறேன்!
இதையெல்லாம் நாமெல்லாரும் 'வட்டமா' உட்கார்ந்து பேசவேண்டும்!

Unknown said...

தலைவரே நன்றாக அலசியிருக்கிறீர்கள், ஒவ்வொரு மனிதனுக்கும் உறவுகளை கையாள்வதில் தனி மேலாண்மை வேண்டும் ,,,

ம.தி.சுதா said...

எனக்கு வட்டங்களில் நாட்டமில்லை.. பிடிக்கவுமில்லை வெளியே ஈருந்து பார்ப்போமே...

Unknown said...

நல்ல அலசல், உளவியல் சார்ந்த மதிப்பீடுகளை நிலை நிறுத்துகிறது.
இது போன்று முன்பு ஒரு முறை யோசித்ததுண்டு. முதலாவது வட்டத்தில் நான் என்பது மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.
மற்றவர்கள் எல்லாம் அதற்கு பின்பு தானே...

Unknown said...

//எனக்கு வட்டங்களில் நாட்டமில்லை.. பிடிக்கவுமில்லை//
நாம் மறுத்தாலும் கூட, நாம் ஏதேனும் ஒரு வட்டத்திற்குள் தான் வாழ நேரிடுகிறது..

மிக சிறந்த பதிவு இது.

KANA VARO said...

தலைப்பை பார்த்திட்டு நீங்க "அந்த வட்டம்" பற்றி கதைக்க போறீங்க எண்டு நினைச்சன். அது தாங்க வட்டாரியால போடுறது.

KANA VARO said...

இதில உள்குத்து இல்லையே! அடிக்கடி குத்து வாங்கி பழகினதால எல்லாத்திலையும் ஒரே பிரமையா கிடக்கு!

ARV Loshan said...

வாழ்க்கையின் பல கட்டங்களிலும் இந்த வட்டங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் மாறிக் கொள்ளும் என்றும் வட்டப் பரப்புக்கள் பல சிறிய வட்டங்களை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் உளவியல் படித்தவேளையில் அறிந்திருந்தேன்.
நல்ல பதிவு.

LinkWithin

Related Posts with Thumbnails